Friday, March 4, 2011

பயணம்-1 - திருவாரூர் நோக்கி...2






இந்தப் படத்தைப் பார்த்ததும் சிலருக்கு எளிதில் இது திருவாரூர் கமலாலயம் தாமரைக்குளம் என்பது தெரிந்துவிடும். சிலருக்கு இது 20 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது என்பது தெரியும்...சிலருக்கு இதில் தெப்பத் திருவிழா நடத்தப்படுவது தெரியும்; 10 நாட்கள் உற்சவம் நடத்தப்படுவது தெரியும். பலருக்கு பார்த்ததும் பக்திப் பரவசத்தில் உற்சாகம் ஊற்றெடுத்து ஓடும்.

ஆனால் நமக்கு.....
இந்தக்குளம் வேறு வகைப்பட்ட உணர்வுகளைத் தருவதைத் தவிர்க்க முடியவில்லை.

இன்று இப்படித் தோற்றமளிக்கும் இந்தக்குளத்தின் வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்த போது, மக்கள் மறந்துவிட்ட... அல்லது அவர்களிடமிருந்து பெரிதும் "மறைக்கப்பட்டுவிட்ட" வரலாறு தெரியவந்தது. எம்மனதில் துன்ப அலைகள் மோதின. அடுத்த பதிவில் இந்தக்குளத்தின் அடியில் புதைந்து போன, புதைக்கப்பட்டு விட்ட உண்மைகளைப் பதிக்க முயற்சிக்கிறேன். 

பூங்காவின் அழகைப் பற்றிக் கூற இங்கு பலர் தயாராக இருக்கையில்(*), அதே பூங்காவில் மலர்செடியின் அடியில் மறைந்திருக்கும் நாகத்தைப் பற்றியும் அதன் நச்சைப் பற்றியும் எடுத்துக்கூற வேண்டியது நமது கடமை என்று நாம் எண்ணுகிறோம்.


Monday, February 28, 2011

பயணம்-1 - திருவாரூர் நோக்கி...

பிப்ரவரி 23ல் நமது வகுப்புத் தோழன் பிரவீனின் திருமணம் திருவாரூரில் நடந்தது. நானும் கலந்துகொள்ளச் சென்றேன். திருவாரூருக்கு எனது முதற்பயணம் என்பதாலும் இந்த இணையப் பதிவலைப் பக்கத்தில் எழுத ஏதேனும் விஷயம் கிடைக்க வேண்டும் என்பதாலும் இந்தப் பயணத்தில் சிலபல புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் எடுத்து வைத்துக் கொண்டேன். அவைகளை ஹ்ம்ஹ.ஹ்ம்ஹ... அடுத்த பதிவில் இடலாம் என்று இருக்கிறேன். என்னுடைய மாமனார் வீட்டில் இருக்கும் கணினி (512 MB DDR -1 RAM , P-IV 2.8 GHz) என்னுடைய காமெராவை சப்போர்ட் செய்யவில்லை... இந்தச் சிறு பதிவை எழுதுவதற்குள் 17 முறை இணையத் தொடர்பு அறுந்ததும் காரணம். விசாகப்பட்டினம் சென்றதும் பயணம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை பார்வையாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன்.