Saturday, January 9, 2016

ராஜா வண்ணத்துப்பூச்சி!


ரெண்டு மூணு நாளாவே ஒண்ணுமே எழுத முடியாமப் போச்சு. அதனால, ஏதாவது எழுதலாமே-ன்னு இந்தப் பதிவு.


அதுக்கு முன்ன, உங்க பெரிய மூளைக்கு ஒரு சிறு வேலை. மேல படத்துல இருக்கது எந்த நாட்டுக் கொடி-ன்னு சொல்லுங்க பாப்போம்!?


தெரிஞ்சுதா?! கஷ்டம்தான்.

சரி. விடுங்க. கண்டுக்காதீங்க!

என்ன விசயம்னா, இதையே இன்னொரு 11 முறை திரும்பத் திரும்ப, அருகருகே ஒட்டி வைத்தால்...... என்ன கிடைக்கும்?!


இதான் கிடைக்கும். பட்டுப்புழு!

ராசா வண்ணத்துப்பூச்சி முட்டையில இருந்து வெளிவந்து, புழுவா சுத்திட்டு இருக்கும்போது, அதோட உடம்புல மொத்தம் 12 பிரிவு/கட்டுகள்(segments) இருக்குமாம். எருக்கஞ்செடிலதான் இந்தப் பட்டாம்பூச்சிகள் முட்டையிடுமாம்!

அதெதுக்கு எருக்கஞ்செடி(milkweed)?

அதை சாப்பிட்டாதான், இதோட உடம்புக்கு ஒருவகை விஷப்பொருள் ( steroid- cardenolide) கிடைக்குமாம். ஒடம்பெல்லாம் வெசம்!!!!!!

அப்பதானே காக்கா, குருவி இதைத் திங்க முடியாது!? அதனாலதான். அதும் ஒரு முறை தின்ன உடனே காக்கா, குருவி செத்துப் போகாது! ஆனா...வாந்தி பேதி புடுங்கிட்டுப் போயிடும். அடுத்து அந்தக் காக்காவோ, குருவியோ, இதப்பார்த்தாலே, தெறிச்சு ஓடிப்போயிடும்! சரி...சரி... பறந்துபோயிடும்.

முட்டை பொரிச்சு வெளிய வந்ததும், அந்த எருக்கஞ்செடி இலையை வயிறு புடைக்கத் திங்க ஆரம்பிச்சுடும். அப்புறம், தன்னைச் சுத்தி ஒரு கூடு கட்டிக்கும், ஒரு பத்து நாளைக்கு அப்புறம், ராசாப் பட்டாம்பூச்சியா மாறி, அந்தக் கூட்டிப் பிச்சுக்கிட்டு வெளிய வரும். வெளிய வந்த உடனே பறக்க முடியாது.

ஏன்னா உடம்பெல்லாம், ஈரமா இருக்கும்; அந்த ஈரம் காயிற வரை இறக்கைய விரிச்சு வச்சு உக்காந்திருக்கும்; அப்படி விரிச்சு வச்சிருக்கும்போதே, அதோட வயித்துல இருந்து, இரத்தம் இறக்கையில இருக்க இரத்த நாளத்துல பாய்ஞ்சு ஓட ஆரம்பிக்கும். அப்புறம் என்ன....... இதோ....இதான்....




ஒரு வளர்ந்தபட்டாம்பூச்சியா மாறிப், பறக்க ஆரம்பிச்சுடும்.

அதுசரி!! இன்னொரு கேள்வி! நல்லா உத்துப் பாத்து சொல்லுங்க. மேல இருக்கது, ஆம்பளையா?!  இல்ல.....,  பொம்பளையா?

கஷ்டம்தாங்க!

சரி....இதோ ஒரு பொம்பளை படம்!


நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா உத்த்த்துப் பாருங்க. ரத்தக் குழாய் ஆம்பளைய விட, பெரிசா தடிமனா இருக்கும் பொம்பளைக்கு. அதுதவிர, ஆம்பளைக்கு இறக்கைல உடம்பை ஒட்டி, இருக்கறது போல,  ரெண்டு புள்ளி பொம்பளைக்கு இருக்காது.

சரிங்க. இதுவே போதும் இன்னைக்கு; தூக்கம் வருதுங்க. bye. enjoyyyyyyyyyyyyyyyyyyy! have a greattttttttt day.

நன்றி: BBC-knowledge-sept-oct-2011.

No comments: