Monday, January 2, 2012

C. N. அண்ணாதுரையின் படைப்புகள்.

http://siliconshelf.wordpress.com/2011/10/19/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/

இந்த வலைப்பதிவைப் படித்த பின் எனக்கு அண்ணாவின் சொல்லாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அதையே இந்த வலைப்பதிவருக்கும் நாம் பதிலாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். மிகவும் பொருத்தமான பதிலாகவே இருக்கும்....
" நரகலை வழித்தெடுத்துக் கொண்டு, நாலு மூலைச் சந்திலே நின்று கொண்டு, நான் வீரன் என்று நர்த்தனமாடுவானேன்..." நமது மதிப்பிற்குரிய(!) எழுத்தரின் அண்ணா பற்றிய பதிவு அப்படி இருக்கிறது. 
      அண்ணாவின் படைப்புகளில் இரண்டை மட்டுமே படித்தவர். உடனே கருத்து கந்தசாமியாக நாறி இருப்பது....மன்னிக்கவும்....மாறி இருப்பது சற்று அதிகப்படியான எழுத்தார்வம் என்பதை மட்டுமல்ல, இவரது காழ்ப்புணர்வையும் மிகத் தெளிவாகவே காட்டுகிறது. இந்தப் பதிவிற்கான மறுமொழிகள்-இவரது உட்கருத்தை ஆமொதிப்பதையோ அல்லது மாற்றாக இருப்பதையோ பொறுத்து- இரண்டு அணிகளாகப் பிரிவது போலும் தெரிகிறது. 
எதிரியின் அணிவகுப்பிலிருந்து அம்புதானே வரும்?! ஏனப்பா எழுத்தாளரே, அந்த அணிவகுப்பில் நீரும் ஒரு படைவீரனை இருப்பது பற்றி எமக்குக் கவலை இல்லை... ஆனால் நீ படைவீரனின் உடையில் இல்லாமல், சாதாரணப் பொதுமக்களின் உடையில் இருந்தாலும், உன் கைப்பேனாவிலிருந்து வரும் அம்பு கூர் மழுங்கியதாக இருப்பதோடு, உன்னையும் முட்டாளாக்கி, படிப்போரிடம் உன் உண்மை உருவைக் காட்டிக்கொடுத்து விடுகிறதே! 
அண்ணா தாக்கியது தமிழரைத் தாழ்த்தி நடத்திய இன்னொரு தமிழ்ப் பேசும் கூட்டத்தைத்தான் என்பது, சாதாரண அறிவிருக்கும் எவருக்கும் தெரியும்.அவரது எழுத்தைப் பற்றி நீ கூறும் மட்டமான விமர்சனம், நீ எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவன் என்பதை மிகத் தெளிவாகவே காட்டிக் கொடுக்கிறதையா. தமிழரைச் சாதியின் பெயரால், மதத்தை காட்டி, கடவுளைக் காட்டி அடிமை செய்தது அமெரிக்கக்காரனோ, ஐரோப்பாக்காரனோ அல்ல; இதே தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ்ப் பேசும் இன்னொரு கூட்டம்தான். அந்தக் கூட்டத்தைத்தான் அண்ணா கண்டித்தார். அந்தக் கூட்டத்தார் அண்ணாவை வெறுத்தனர்.
செவ்வாழையை நீ பிரச்சாரக் கதை என்பதும், வேலைக்காரியை நீ முக்கியமான ஆனால் சாதாரண நாடகம் என்பதும் கூர் மழுங்கிய சொல்லம்புகள்தானே....!? வேலைக்காரியில் இருப்பவை வெறும் முற்போக்கு வசனங்களா?! இல்லை கருத்துக்களா என்பதிலும் உனக்குத் தெளிவில்லையே ஐயா?!  ஏனிந்தக் குழப்பம்?!  சரி அதை சட்டம் (frame) என்று கொண்டாலும், அந்தச் சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும் படம் எது என்பதையும் நீ சொல்லி இருக்கலாம். 
`அவரது எழுத்துக்களை நாட்டுடமை ஆக்கிவிட்டார்கள்' என்று ஒரு வரியில் பதில் சொல்லி விடலாம் உனது சந்தேகத்திற்கு...ஆனால்...
அவரது எழுத்துக்களை நாட்டுடமை ஆக்கினார்கள என்று "கூடத்" தெரியவில்லை-என்கிறாய். இது வெறும் செய்தி வாக்கியமாகத் தெரியவில்லை; இந்த வாக்கியத்தில் தெறிக்கும் இளக்காரத் தொனி இருக்கிறதே, அதைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டி இருக்கிறது. "கூட" என்ற பதம் அதை உணர்ச்சி வாக்கியமாய் மாற்றி இருக்கிறதே, அங்கு மறைந்திருக்கிறது உனது மனதிலோடும் எண்ணமும் உணர்ச்சியும். அதாவது...நாட்டுடமை ஆக்கப்பட்ட அனைத்துப் புத்தககங்களையும் படித்துவிட்ட உமக்கு அண்ணாவின் புத்தககங்கள் மட்டும் கண்ணில் படாமல் போன காரணம், அவை நாட்டுடைமை ஆக்கப்படாததே!? mmmhmmhm... அல்லது... நாட்டுடைமை ஆக்கப்படும் அளவுக்கு அண்ணாவின் படைப்புகளால் பயனில்லாததால், அரசு அதை நாட்டுடமை ஆக்காமலே விட்டுவிட்டது, எனவே அது உன் கண்ணிலே படவில்லை?! 
தமிழ் இணையப் பல்கலையின் மின்-நூலகத்தில் அவரது நூல்கள் இல்லை. அதற்குக் காரணம் உன் கூட்டம் செய்யும் "வேலை"தான். உன் கூட்டம்தான் இது போன்ற அரசாங்க "வேலை"களில் ஆணி அடித்து அமர்ந்து விடுமே! வேலையில் இருக்கும்போது இது போன்ற "வேலை"களைத் தெளிவாகச் செய்யும். கம்ப ராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்பாவை, திருவெம்பாவை போன்றவைகளை மட்டும் ஒன்றுக்கு 100 மொழிகளில் வெளியிடும் முயற்சியில் தமிழனின் வரிப்பணம் செலவழியும். முடிந்தவரை அதிகபட்ச தமிழரை முட்டாள்களாகவே வைத்திருக்க எந்தப் புத்தகங்கள் உதவுமோ அவைகளை மட்டுமே மிகக் கவனமாகப் புகழ்ந்து வெளியிடும் உன் கூட்டம். சுஜாதா போன்றோர் தமிழர்களின் முட்டாள்தனத்தில் ஆதாயம் தேடும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் எப்படி அண்ணாவின் படைப்புகளைப் பற்றி "நல்ல வார்த்தை" சொல்லுவார்கள்?! தமிழனுக்கு சுய அறிவைத் தரும், தெளிவைத் தரும், சுய நல நரிகளின் சுயரூபத்தைக் காட்டும் அண்ணாவின் படைப்புகளைப் பற்றி சுஜாதா போன்றோர் பாராட்டிப் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று சிறுபிள்ளைக்கும் எளிதாகப் புரியும். ஆட்டுக்கிடைக்குக் காவலாக இருக்கும் காவலனைக் குள்ள நரிக்கூட்டம் விரும்பவா செய்யும்?!
அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லியின் மணம் பற்றி மட்டுமல்ல, கள்ளியின் குணம் பற்றியும் எச்சரித்திருக்கிறார். உன் கூட்டம் கள்ளைப் பால் என்று கூறித் தமிழனுக்குக் கொடுத்து, மதம் என்ற மதுமயக்கத்தில் ஆழ்த்தி  வைத்திருப்பது தெரிந்த சில தமிழர்கள் உனது எழுத்தின் உள்ளிருக்கும்  உண்மைக்கருத்தை சுலபமாகத் தெரிந்துகொள்வர். ஆனால் அந்த மயக்கத்தில் இருப்போரை மத அடிமையாக்கும் வேலையை மட்டும் உன் கூட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது மின் நூலகம், திரைப்படம், தொலைகாட்சி போன்ற ஊடகங்கள் வழியாக. அந்தப் போதையின் பிடியிலிருப்போரும், உன் கூட்டத்தின் சுயரூபம் தெரியாதாரும் வேண்டுமானால் அண்ணாவை வெறுக்கலாம். ஆனால் உன் கூட்டத்தை பற்றியும் அண்ணாவின் எழுத்தைப் பற்றியும் உண்மை தெரிந்தோர் உனது பதிவைக் கண்டால்....