Thursday, May 21, 2015

continuous casting mould simplified



thiNai maalai nootraimbadhu - திணை மாலை நூற்றைம்பது.

thiNai maalai nootraimbadhu.(திணை மாலை நூற்றைம்பது).

author - kaNi maedhaaviyaar / கணி மேதாவியார்.
period - AD.5th century / கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு.
number of songs - 150.
thiNai - all 5 agath thiNai/ அகத்திணை ஐந்தும்.



             திங்களுள் வில்லெழுதித் தேரதுவேல் விலகித்
             தங்களுள் உளாளென்னும் தாழ்வினால் - இங்கண்
             புனம்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்துஎன்
             மனம்காக்க வைத்தார் மருண்டு.

            1500 ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட பாடல் அருமையான அகத்திணைப் பாடலிது. இன்றைய பல மொழிகளே இல்லாத காலத்திலும், மிக மிகத் திருத்தம் பெற்ற வடிவில் இயற்றப்பட்ட பாடல். காதல் வயப்பட்ட தலைவன் தலைவியைப் பாராட்டிப் பாடும் இப்பாடல் சமீபத்தில் கண்ணில்பட்டதால் இங்கு.....

          "பிறைநிலா வில் வரைந்ததுபோல் இருபுருவங்களும் உள்ளன. இவளது பார்வை என் இதயத்தைத் துளைக்கும் வேல்போல் இருக்கிறது. இத்தகைய பேரழகி இவளது கிராமத்தாருக்கு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தியதலோ என்னவோ இவளை தினைப்புனம் காக்கத் தனியே அனுப்பிவிட்டனரோ!? அல்லது இருண்டு கிடக்கும் என் மனதைக் காக்க அனுப்பினரோ?!?"

          இதை எழுதிய கணிமேதாவியார் ஒரு சமணர். ஐந்தாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் பிறக்கவே இல்லை. பக்தி இயக்கம் பிறந்துதான் தமிழனுக்கு காதலைப் பற்றி கற்றுக்கொடுத்ததுபோல் திரித்துக் கூறுவோரும் உண்டு. காதலைப் புனிதமாக்கியது இத்தைகைய கண்ணியம் தவறாத வாழ்வும்,வாக்கும்தான். இவை எப்போதோ தமிழர் வாழ்வில் பிறந்திருந்தன. நம்மை மனிதனாக்கவும், மனிதனைப் புனிதனாக்கவும் இத்தகைய உன்னதமான பாடல்கள் போதும், பக்தி தேவையில்லை.

           a romantic song written in AD.5th century. a period during which many of the now-prominent languages were not even born. 1500 years back, a civilisation thrived and used its much-advanced and well-developed language to express the subtleties of human relationships captured in their finest hours, frozen in this poetry.

here goes the translation....

          the hero finds the girl protecting millet-fields. it's such a dry forsaken land that rarely anyone passes through it. hero observes her, smitten in love, wonders and fumbles to express, " this girls face looks like full-moon,eyebrows resemble curved bows, and her eyes dart my heart with spears. is it because, her wonderful beauty has made other villagers feel soooooo inferior that they had sent her here alone, to protect this millet-field?! or to protect my forlorn heart?! "


remember this, that is not the age of iphone and facebooks. a period in which probably many of the modern countries were not even there. 15 centuries ago. this is how love blossomed. so natural while standing surrounded by nature. the expression is sooooooo gentle and tender that this would make any teen to fall in love with the idea/concept- LOVE.