Monday, November 14, 2016

ஞானி rene descartes


ரெனே டேக்கார்ட் (rene descartes) ஒரு பிரெஞ்சு நட்டுச் சிந்தனையாளர். தத்துவஞானி, அறிவியலறிஞர் மற்றும் கணிதமேதை.

இவரைப் பற்றி நாம் இங்கு எழுதுவதை விட, விக்கிப்பீடியாவில் இன்னும் மிக விரிவான செய்திகள் கிடைக்கும். கூகிள் இன்னும் அதிகத் தகவல்களைத் தரும்.

இன்றும்கூட நான் சரியாகப் புரிந்துகொள்ளாமலே இன்ஜினியராக இருக்க சற்றே வெட்கப்படும் பாடங்கள் இயற்கணிதமும் (algebra) வடிவியலும்(geometry). ஆனால் இவை இரண்டையும் கரைத்துக் குடித்தவர் இந்த டேக்கார்ட். இயற்கணிதத்தைக் கண்டுபிடித்தவர். (இவரைப் போலவே லீப்னிஸும் -leibniz இயற்கணிதத்தைத் தனியாகக் கண்டுபிடித்தார்.)

வடிவகணிதத்தைச் சமன்பாடு வடிவில் கொண்டுவந்தவர். வட்டத்தைச் சமன்பாட்டில் அடக்கியவர்; இதுபோல பல வடிவங்களையும் சமன்பாட்டில் அடக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்தவர்.

இது ஒரு தலைசிறந்த கண்டுபிடிப்பென்றால்......... என்னைப் புன்னகைக்கச் செய்த விசயம் வேறு.

இத்தகைய மிகச்சிறந்த ஞானி, சிந்தனையாளர், கணிதமேதை, அறிவியலறிஞர்.......... நம்பிய விஷயம்....... என்னவென்றால்.......

ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட பறை/மேளம்/கொட்டு, ஓநாய்த்தோலினால் செய்த பறையின்/மேளத்தின்/கொட்டின் சத்தத்தைக் கேட்டால்..... தான் ஒலித்துக்கொண்டிருப்பதை உடனே நிறுத்திவிடும்.......என்பது!*

*பக்கம் 37, சனவரி-2016, history todayவிலிருந்து.

இது அந்தக்காலத்தில் மிகப் பரவலாயிருந்த மூடக்கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டு. என்னதான் கணிதப்புலியாக இருந்தாலும்....... மற்ற துறைகளில் அத்தகைய கொள்கைகள் தவறாக இருந்தன.

கி.பி.14/15/16ஆம் நூற்றாண்டுவரை, பண்டைய கிரேக்கத்திலும், ரோம்-நாட்டிலும் பரவியிருந்த கருத்து- "காந்தத்தில்(magnet) பூண்டுச் சாறு  (garlic juice) தேய்த்தால், காந்த சக்தி போய்விடும்" என்பது.

இதற்கு இரு காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு.

1. கிரேக்கத்திலும் ரோம் நாட்டிலும் 13/14ஆம் நூற்றாண்டுவரை காந்தம் மிக மிக அரிதாகவே கிடைத்தது. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால்தான் வளைகுடா நாடுகளிலும் மத்தியத்தரைக்கடல் நாடுகளிலும் காந்தத்திசைகாட்டி சீனாவிலிருந்து கிடைத்தது.

2. காந்தம் கிடைக்காவிட்டாலும், அதைப்பற்றிய கருத்துப்பரவல் இல்லாமற்போனதற்கு அச்சுத் தொழில் இல்லாமல், சரியான கருத்துக்கள் பரவலாக மக்களைச் சென்று சேராததும் ஆகும். அச்சுத்தொழில் 1450க்குப் பின்னாலேயே விரிவாகப் பரந்து சிறந்தது.