Monday, December 29, 2014

that which I call a rose.... கதிரும் நிலவும்... கதிர்நிலவன்

An unequivocal Shakespearean quote that philosophises about romeo-the person and his NAME, in particular; …any OBJECT and its NAME, in general.

4 years back I had to select a name for my kid. Though this quote came across my mind, I gave it very little thought, brushing it aside with a smile, started searching for a good name then. After spending considerable effort and time scoring through various sources for a desirable name, I zeroed in on a name - amudha nilavan.

               My wife was very happy and readily accepted. But, within few minutes, I realized it had some influence of sanskrit. So I suggested to drop a part of that name and came up with KATHIR NILAVAN. கதிர் நிலவன்.

               I had to consider a lotttttttttt in selecting this. First and foremost, a name that is PURELY TAMIL, SACRED TAMIL,……..in its honour,….. more as a worship, a little as a celebration too. “Kathir nilavan” perfectly qualified. Feeling very proud and honored to take this name.

               Then, it shall attempt to give my kid a sense of where he belongs and what he should be. More than what it tells others about him, it shall remind him every time which his roots are and what shall he aspire to become.

Kathir nilavan has two different literal meanings.  (இரட்டுற மொழிதல் அணி; தமிழ் இலக்கணம், பழக்கத்தில், வழக்கொழிந்து போய்விடவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்ல.)

kathir(avan)+nilavu contains sun and moon.

கதிரும்  நிலவும். பகைவர்க்குக் கதிரவன்போல் காய்பவன், உற்றார்க்கு நிலவைப்போல் தண்மையானவன் எனப் பொருள்வரும் வண்ணம் இப்பெயரிட்டேன்.

Another way, kathir+nilam shall mean a field full of tender paddy saplings.

நீர்வளமிக்க, உழவு சிறக்கும், நெற்கதிர்கள் நிறைந்த, மருதநிலத்தவன் எனவும் பொருள்படும்படி இப்பெயர் சூட்டினேன். சுருக்கமாக, உழவன். எனது தாய் மற்றும் தந்தை வழி இரண்டிலுமே வேளாண்மையை, உழவை வாழ்க்கையாக, தொழிலாகக் கொண்டவர்கள். அவ்வழி வந்தாலும் எனது தொழில் மாறிப்போனதோடு, எனது மகனின் மொழியும் மாறிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததால், எனது முன்னோரது தொழில் மற்றும் மொழி அடையாளங்களை இழக்க மனமில்லாமல், இப்பெயரைத் தேர்ந்தெடுத்தேன். இரண்டே தலைமுறையில், எனது பாட்டன் சிவனு, முப்பாட்டன் பெருமாள், பாட்டனுக்குப் பாட்டன் மாடன் என எனக்குத் தெரிந்தவரையில் தலைமுறை தலைமுறையாய்ச் செய்துவந்த உழவும், பேசிவந்த தமிழும் பிரிந்துவிடும் நிலை வந்தெய்தியது.

உழவு சென்ற தலைமுறையிலேயே நலிந்து வாடத்தொடங்கி விட்டது. தமிழ் எனக்கு தாய்மொழி, பயிற்று மொழி, உயிரென்றாலும், தொழிலின் தேவை இன்னும் மூன்று மொழிகளைக் கற்றுக்குக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியது. அதோடு தமிழகத்தில் வாழும் வாய்ப்பையும் இழக்கச் செய்துவிட்டது. எனது புதல்வனுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டது.

இப்படியாகத் தலைமுறை தலைமுறையாகக் கூடவந்த தொழில், மொழி அடையாளங்களை இழப்பதென்பது அவ்வளவு எளிதானதல்லவே. அந்த அடையாளங்கள் பெயரிலாவது எஞ்சி இருக்கட்டுமே என்ற எண்ணத்தில்தான் இப்பெயரைத் தேர்வுசெய்தேன்.

நிலத்தையும் நீரையும், உழவையும், நிலவையும், கதிரவனையும் மிக நெருங்கிய தொடர்புகொண்டு, அவைகளை முற்றிலும் சார்ந்து வாழ்ந்த தலைமுறைகளின் தொடர்ச்சி நான். இயற்கையோடு முற்றிலும் இயைந்த அந்த உழவு வாழ்க்கையை தமிழ் தவிர வேறெந்த மொழியும் மிக மிக நெருக்கமாகப் பிணைத்ததில்லை என்பது என் எண்ணம். அந்த மொழியையும் இழந்து, தொழிலையும் துறந்து, இயற்கையையும் பிரிந்து நிற்கவேண்டிய கட்டாயத்தில் அடுத்த தலைமுறை என்பதை நினைக்கையில் நெஞ்சு கனப்பதைத் தவிர்க்க முடியவில்லைதான்.

இயற்கைக்கும், தமிழ்மொழிக்கும், உழவுத்தொழிலுக்குமான அந்தத் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளும், நினைவுபடுத்திக் கொள்ளும் ஒரு சிறு அடையாளம் இப்பெயர்.

தமிழில் இத்தனை எழிலாய் எண்ணத்தைப் பதித்தபின் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தெழுதினால் அழகு சிதையுமோ என்ற எண்ணத்தால், இப்பதிப்பின் பிற்பகுதி தமிழில் மட்டும்.

மொழி இழந்து,
வாழ்விடம் இழந்து, 
தொழில் இழந்து, 
வாழ்கையில், அதற்கான காரணங்களை மனம் ஆராயத் தலைப்படுவது நியாயம்தானே.

தமிழகத்தில், தொழில் வளமில்லை, அதனால் பொருளாதாரம் பெருக வாய்ப்பில்லை, அவற்றைத் தேடி வெளியூர்ப் பயணம். தாழ்ந்துபோன தமிழகத்தில், தமிழன் வாழவே வழியில்லையெனில், தமிழ் வாழமட்டும் எங்கிருந்து வழிபிறக்கும்?! தமிழ் வாழ்வது உண்மைத்தமிழரின் நாவிலும், நெஞ்சிலும்தானே?! அவரே அங்கில்லையெனில்!?
அரசியல் தெளிவில்லை, இருக்கும் தொழிலுக்கான படிப்பில்லை. படிப்புக்கான தொழில் இல்லை. இல்லாத தொழிலுக்குப் படிப்புண்டு. எனது படிப்பு? உலோகப் பொறியியல்? வேலை? தமிழ்நாட்டில் இல்லை!

சுழன்றும் ஏர்பின்ன துலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

இவற்றின் பொருள் என்மகனுக்குத் தெரியாமலே போய்விடுமோ?!


No comments: