Friday, February 20, 2015

முத்தொள்ளாயிரம்...2

முத்தொள்ளாயிரம் பற்றி சில செய்திகள் கிடைத்ததால்  பகிர்ந்து கொள்ளலாமே என்று....


1. மூவேந்தர்களைப் பற்றிய 3 * 900 பாடல்கள், மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட தொகுப்பு என்பது எளிதாகவே விளங்கும்.

2. "அள்ளற் பழனத்து" எனத் தொடங்கும் பாடல் சேர மன்னனை வாழ்த்திப் பாடுகிறது. அந்தச் சேர மன்னன் யாரென்று தெரிந்தால்......!?

3. அப்பாடல் "....கோக்கோதை நாடு." என்று முடிகிறது. கடைச்சங்க காலத்தின் மூவேந்தர்களின் கடைசித் தலைமுறையாக தென்னகத்தை ஆண்ட அரசகுல வாரிசுகள்.....பாண்டிய நாட்டில்- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்- நெடுஞ்செழியன். சோழ நாட்டில்- கோ செங்கணான் என்ற கோச்செங்கணான். கொங்கு நாட்டில்- சேரர்களின் உறவினர்களான பொறையர்களின் அரசன்- கணைக்கால் இரும்பொறை.

4. சம காலத்தில் வாழ்ந்த சேர அரசன்- குட்டுவன் சேரல்(குழந்தைப் பருவத்தில்) என்றும், கோ கோதைமார்பன் (முடிசூட்டிய பின்) என்றும் அழைக்கப்பட்டவனைத்தான் அப்பாடல் வாழ்த்திப் பாடுகிறது.

5. இந்நான்கு அரசர்களும் சமகாலத்தவர். காலம் கடைச்சங்கத்தின் இறுதிக்காலமான கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.

6. மேலும், இந்தக் குட்டுவன் சேரல் யாரெனில்....., சேரன் செங்குட்டுவன் மகனாவான். பரணரிடம் கல்வி கற்றவன்.

7. சேரன் செங்குட்டுவனைப் பாராட்டி பரணர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தைப் பாடியபோது அவரை உக்குவிக்கும் முகமாக உம்பர்காடு எனும் ஊரின் வருவாய் முழுவதையும் பரணருக்குப் பரிசளித்ததுடன், தன்மகன் குட்டுவன்சேரலை பரணரிடம் கல்வி கற்கவும் பணித்தான்.


அவ்வளவுதான் நம்மிடமுள்ள தகவல்கள். உங்கள் பொழுது நன்றாக அமையட்டும். நன்றி.

No comments: