Friday, September 20, 2019

எந்த ஆராய்ச்சியாளனைக் கேட்பது!?🤔

சொற்களைத் தேடி அலைவது துன்பம் மிகுந்தது.

எண்ணங்களையும்...உணர்வுகளையும்...ஒலிவடிவப் படுத்துவது....மொழியெனில்...

சரளமாகவும் தடையில்லாமலும் பிறக்காத வார்த்தைகளில்... உணர்வுகளும் எண்ணங்களும்... முழுமையாக வெளிப்படாமல்... சிக்கிக்கொண்டு சிதைந்துவிடுவதுமுண்டே!!!

சிறைப்பட்டுவிட்ட உணர்வுகள்தான்...
கண்ணீராய் வடியுமோ!?

வார்த்தைகளில் வடிவம்தர....
அனைவரும் புலவரல்லவே!?🤕

பொய்யும் புலவர்களிடம் அழகாகி...நீண்ட ஆயுள் பெற,
ஆனால் ஊமையாகிவிட்ட உண்மை உடனே மரித்துப் போவதேன்!?😷

சொல்லாத காதலிலும்...
வெல்லாத காதலிலும்...
எத்தனை சொற்கள் சேர்ந்து,
ஒருதுளிக் கண்ணீரை உருவாக்குமென...
எந்த ஆராய்ச்சியாளனைக் கேட்பது!?🤔

இயேசுவுக்குத் தெரியாது...
பூமி சூரியனைச் சுற்றுவது!
உனக்குமா தெரியாது...,
நான் உன்னைச் சுற்றுவது!?
இறக்கும் வரை...
இயேசுவுக்குத் தெரியாது!
கடைசிவரை நம்பியது...
சூரியன் பூமியைச் சுற்றுவதாய்!


தோற்ற காதலர்களின். ரோஜாச்செடிகளில்...
ஒவ்வொரு துளிக்கண்ணீருக்கும் ஒரு ரோஜா கூடுதலாக மலருமாமே!
உண்மையா?

கடற்கரையோரம் தனியாய் நடந்துகொண்டிருந்தேன்.
சிப்பி தேடும் சிறுவனைப் போல்...
உன் காதலைத் தேடிக்கொண்டே!

இலவு வெடிக்க,
பஞ்சோடு பறந்த விதை...
மரத்திற்குத்
திரும்புவதே இல்லை!
சில காதலும் அதுபோல...
எவரிடை பிறந்ததோ...
அவரிடம் திரும்பி
வருவதேயில்லை!





No comments: