"அந்தக் கட்டத்தைப்" பற்றிப் பேச சரியான நேரம் கிடைக்காததால் இவ்வளவு தாமதமாக...
முன்கதைச் சுருக்கம் இதுதான், ஹிந்து இதழில் வெளியானதை "அப்படியே" நம்புவோமானால். ஹிந்து இது போன்ற, நேரடியாகப் பொருளாதாரம், அரசியல், மதத்தோடு சம்பந்தமில்லாத விஷயங்களில் பெரும்பாலும் உண்மைகளையே பதிப்பிக்கிறது, அதனால் சேகரிக்க முடிந்த அளவு. மேலும், இவைகளுக்கு இடையேயான சம்பந்தம் ஹிந்துவுக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் "சில பல" காரணங்களால் வெளியிட முடியாத நிலையில் உள்ளதா?, என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் velichcham. சரி சரி... ஆராய்ச்சி மனப்பான்மை என்பது எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் வந்து விடுகிறதா என்ன?! அப்படியே வந்தாலும், அடுத்தவர் குற்றங்களையும் குறைகளையும் பற்றி மட்டுமே ஆராயத் தெரியும் அதற்கு.
எண்ண நடந்தது-ஹிந்து சொல்லிவிட்டது. ஆனால் ஏன் இவ்வாறு நடக்கிறது?! தெரிய வேண்டாம்?
ஜோதி ghanapurஐச் சேர்ந்தவள். பெற்றோரோடு மூன்று சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் கொண்ட குடும்பம். ஜோதி ஜனார்தனைக் காதலித்தாள். ஒரே ஜாதிதான். அதை ஊர்ப் பஞ்சாயத்துப் பெரியவர்களிடமும் அவளே தெரியப்படுத்தினாள். ஒரே ஜாதிதானே, ஊரும் ஒத்துழைப்புத் தரத் தயாராய் இருந்தது. அனால் பிறந்த வீட்டாருக்கு அது அவமானமாய்த் தோன்றியது. வீட்டுக்குப் பயந்த ஜோதி தாயோடு பக்கத்தில் இன்னொரு ஊருக்குச் சென்று தங்கினாள், அமளி குறையட்டும் என்று. குறைந்தது, அல்லது குறைந்தது போல் தெரிந்தது. அண்ணன் வந்து வீட்டுக்கு அழைத்தான். சமாதானம் சொன்னான். அவன் மனம் குளிர்ந்து இருந்தது, அல்லது குளிர்ந்திருந்தது போல் தெரிந்தது. காதலில் கட்டுண்டவள் கண்ணுக்குக் காத்திருந்த ஆபத்துத் தெரியவில்லை. உடனே வீடு திரும்பச் சம்மதித்துத் தலை ஆட்டினாள். பெற்றோர் தடை இல்லை. உடன்பிறந்தான் ஓடி வந்து அழைக்கிறான். ஊரும் ஒத்துழைக்கிறது. கண்ணின் மணி எனக் காத்து வந்த காதல் கனியும் நேரம் வந்தது. அவளது மனதில் எத்தனை மகிழ்ச்சி இருந்திருக்கும் என்பதைக் எளிதாய்க் கற்பனை செய்து கொள்ளலாம். காதல் கனியும் நேரத்தில் கன்னிமனம் களித்துக் கூத்தாடி இருக்கும். இந்த மகிழ்ச்சியை மனம் கவர்ந்தவனிடம் உடனே தெரிவிக்க வேண்டுமெனத் துள்ளியிருக்கும் அவள் மனம். "இந்தக் கட்டம்"தான் நாம் குறிப்பிட்ட, அந்த உரையாடல் நடந்திருக்க வேண்டிய கட்டம். உண்மைக் காதல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மனம் மயங்கியிருக்கும். மறைந்திருந்த ஆபத்தை அறிந்து கொள்ளப் பொறுமை இருந்திருக்காது. இயற்கைதான்.
அடுத்து நடந்ததுதான் இந்தியாவின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டும்.
அண்ணன் வந்தான். அன்போடு அழைத்துச் சென்றான்.அடுத்த நாள் காலையிலே கொலையும் செய்தான்-அவளால் குடும்பத்துக்கு வந்த கெட்ட பெயர் நீங்க-பத்து மாதம் சுமந்து பெற்றவள் கண்முன்னே-ஒரே வயிற்றில் உதித்த சகோதரிகள் கண்முன்னே. அவர்களுக்கும் இதில் சம்மதமே. எப்படிக் கொன்றான்? அவளது தலையில் ஆட்டுக்கல்லால் பலமுறை அடித்து மோதி.பெற்ற பாசம் தாய்க்கு இல்லை. உடன்பிறந்து இத்தனை வருடம் உடன் வளர்ந்தவள் என்ற பாசம் இல்லை. மனிதாபிமானமுமா இல்லாமல் போனது?!கொலைதான் தண்டனை என்றாலும் "இப்படிக் கொடூரமாய்க்" கொலைசெய்வது மனிதத்தன்மையுள்ள செயலா?! கொன்றவன் யார்? அவளது edhiriyaa....?! இல்லை எவனோ தெரியாதவனா....?!கூடப்பிறந்தவன்.
சேர்த்து வைப்பதாகக் கூறி அழைத்து வந்தான். நம்பி வந்தாள். அழித்து விட்டான்-"அண்ணன்". எவ்வளவு நல்ல குடும்பம். எத்தகைய குடும்ப கெளரவம். அதை ஜோதி "கெடுத்து" விட்டாளாம்.எப்படி? உண்மையாய்க் காதலித்து; ஊரார் அறியும் வண்ணம் காதலித்து;உயிர் போகும் வரை காதலித்து. அனால் அண்ணன் அந்தக் குடும்பத்தின் கௌரவத்தைக் "காப்பாற்றி" விட்டான்;எப்படி? அவளைக் கொலை செய்து. அது மட்டுமா, சகோதரியைக் கொன்ற கொலைகாரன் என்ற "பெரும்புகழை" அல்லவா சேர்த்து இருக்கிறான்? இப்படிப்பட்டதொரு "புகழைப்" பெற நீங்களோ நானோ கனவிலும் எண்ண முடியுமா? கற்பனை செய்ய முடியுமா? என்ன செய்வது... நாமெல்லாம் குடும்பப் பெருமை அறியா காட்டு மிராண்டிகள். அவர்களோ ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே "நாகரிகமடைந்த" இந்தியச் சமூகத்தின் "கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கும் kanavaankal ."
கொலை செய்தது 'காதலித்ததற்காகவல்ல' ... அந்தக் காதலை 'ஊரறியச் சொன்னதற்கு'. அதே காதல் கள்ளக்காதலாய் இருந்து, ஊரார் அறியாமல் மறைத்து வைக்கப்பட்டு இருந்திருந்தால், இந்தக் "குடும்பப் பெருமை காத்த கோமான்" கூடப் பிறந்த குணவதியைக் கொன்று போட்டிருக்க மாட்டான். ஆனால் அவள் அதை ஊரறியச் செய்ததில்தான் "குடும்ப மானம்" போய்விட்டது.
நல்லவன் எனில், அவனது எண்ணத்தில் காதலிப்பது தவறென்றால் அது ஊருக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் தவறு என்றே இருந்திருக்க வேண்டும். ஆனால் காதலிப்பது ஊருக்குத் தெரிந்தால்தான் தவறு, என்றால்.....? எப்படிப்பட்ட சிந்தனை? தவறு செய்யலாம்,காதலிக்கலாம், கன்னத்தில் முத்தமிட்டுக் கொள்ளலாம், ஊர் சுற்றலாம், உதட்டோடு உதடு உரசிக் கொள்ளலாம், கட்டி அணைத்துக்கொள்ளலாம், கற்பிழக்கலாம்; ஆனால் பிறருக்கு மட்டும் அந்தக் காதல் தெரியக்கூடாது என்பதுதானே இந்தக் "கண்ணியவானின்" எண்ணம்?! இப்படிப்பட்ட சிந்தனையைத்தான் பெரும்பாலும் இந்தியச் சமுகம் "குலப் பெருமை..... குடும்ப கெளரவம் " என்றெல்லாம் எண்ண வைத்திருக்கிறது; "ஒவ்வொருவரையும்" எண்ண வைக்கிறது. அப்படியே ஊரறியத் தெரியப்படுத்தினால் கொலைதான் தண்டனை-கூடப் பிறந்தவளானால் என்ன, சொந்த மகளானால்தான் என்ன?!
காதலைப் பற்றியும் குடும்ப கெளரவம் பற்றியும் குலப் பெருமை பற்றியும் இவர்களது "அறிவும் ஆராய்ச்சியும்", உறவுகளின்மேல் கொண்டிருக்கும் "அன்பும்", நமது "அறியாமையை" வெளிச்சம் போட்டுக்காட்டி அவமானத்தில் நம்மைத் தலை குனிய வைக்கின்றன. இவர்களது இந்த "அறிவும் குடும்ப கெளரவம் பற்றிய unarvum", கொலையே செய்ய வைத்தது-சொந்தத் thangaiyaiyae. பெற்றோரைப் பதற்றமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கச் செய்தது.சகோதர பாசத்தையும் தாய்ப்பாசத்தையும் அழித்தது. இத்தகைய "மிகச்சிறந்த" உணர்வைத்தான் இந்தியர்கள் போற்றிப் பாதுகாக்க விரும்புகிறார்கள்-கெளரவம் என்ற பெயரில்.
ஒன்பது காதல் செய்து அதை ஒழித்து மறைப்பது, உண்மைக்காதலை ஒழித்துக்கட்டுவது-இரண்டுமே தவறுதான். இதை எப்போது இந்த "நாகரிக" மக்கள் உணர்ந்து ஏற்றுக்கொள்வர் என்பது நமக்குத் தெரியாது. அனால் அக்காலம் விரைவில் வர வேண்டும்.
உண்மையான காதலுக்கு உங்கள் உதவி ஒன்றும் வேண்டாம், அது ஒரே குட்டையில் ஊறி, நாறிப்போன மட்டைகளான உங்களால் முடியாது என்பது தெரியும். உங்கள் உபத்திரவம் இல்லாமல் இருந்தாலே போதுமே.
எத்தனை கனவுகள் இருந்திருக்கும்? அவனுக்கும் அவளுக்கும்? அவளது தலையோடு அவையும் சிதறிப்போய் இருக்கும். aval வருவாள் எனக் காத்திருந்தவனுக்குச் செய்தி சென்றிருக்கும், செப்புச்சிலை அவள் செத்தால் என்று. போதுழு விடிந்தது;வஞ்சி வருவாள்;வாழ்விலும் விடியல் வரும் என்றெல்லாம் கனவுகண்டிருப்பான். அந்த அதிகாலையே அவர்களுக்கு அந்தி ஆகிப்போனது.
ஒரே அடியில் அவள் சாகவில்லையாம். ஒவ்வொரு அடியாக பலமுறை அடித்து தலை நொறுங்கின பின்னே அவள் இறந்தாளாம். அந்த ஒவ்வொரு நொடியிலும் அவளது எண்ணம் எப்படி இருந்திருக்கும்?!-"இதற்குத்தானா என்னைக் கூட்டிவந்தாய் அண்ணா?!... இப்படி கொலைசெய்து வேடிக்கை பார்க்கவா என்னை இத்தனை நாள் வளர்த்தாயம்மா?!.... அப்படியென்ன உங்களுக்கு தவறிழைத்தேனென்று எனக்கிந்த தண்டனை அக்கா?!" என்றெல்லாம் கேட்க நினைத்திருப்பாள், ஆனால் மரண வேதனையில் முடிந்திருக்காது.
நீங்கள் அண்ணனாய்,தம்பியாய் இருக்கலாம்...தாயாய், தந்தையாய் இருக்கலாம்... அக்கா,தங்கையாய் இருக்கலாம்.... சமூகம் சிந்திக்கட்டும்.
Sunday, June 22, 2008
Monday, June 16, 2008
இன்னொரு காதல் கதை...1
ஜோதி: கண்டிப்பா நாளைக்கு மீட் பண்றோம்...சரியா?!
ஜனார்தன்:தேங்க்ஸ் டி. இப்பவாது உங்க வீட்டுல மனசு வந்து ஒத்துக்கிட்டாங்களே....... (பெருமூச்சோடு) ...ம்ம்ம்... ஆனா எனக்கு இன்னுமே பயமா இருக்குடி.... என்னமோ தெரியல... உங்க வீட்டை நெனச்சாலே... காட்டு மிராண்டிக் கூட்டம்தான் ஞாபகத்துக்கு வருது.... என்னோட friends கூட சொல்லிருக்காங்க...
ஜோதி: (கேலிக்குரலில்) ஐய.... இப்படி பயந்து சாவுறியே... உனக்கு லவ்வு வேற?!?! எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?!(துள்ளும் குரலில்)ம்ம்ம்... நீ சொல்லிட்டு இருப்பியே.... எங்க வீட்டுல மட்டும் accept பண்ணிட்டா , நீ எனக்கு dowry தந்து கல்யாணம் பன்னிக்குவே னு ....மவனே அதுக்கு ரெடி ஆகிக்கோ.... சொன்ன படி எனக்கு dowry தரனும்...(சிரிப்புடன்)...ஆமா... கன்னத்துல தருவியா... கண்ணுல தருவியா.. மூக்குல தருவியா.... இல்ல காதுல தருவியா?!?! நீ எனக்கு சத்தியம் பண்ணினதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல?!(குறும்பு தொனிக்கும் குரலில்) ....
ஜனார்தன்: கண்டிப்பா.... ச்சே ச்சே... இதெல்லாம் மறக்கற விஷயமா??!.... சரி...சரி... ஆனா அதுக்கு முன்ன இந்த வார கடன் மிச்சம் இருக்கே..?!?! (குறும்புடன்)....
ஜோதி: டேய்...வேணாண்டா.... (சிரிப்புடன்).... ம்ம்ம்.... (கொஞ்சம் யோசித்து) ஆமா இப்ப எதுக்கு தயங்கணும்?!?! இப்பதான் எல்லாருக்குமே தெரியுமே?!?யாருக்கு பயப்படனும்?! எப்படியும் நம்ம கல்யாணத்த யாராலையும் இப்போ தடுக்க முடியாது... (குறும்பு கொப்பளிக்கும் குரலில்)அதனால நீ இவ்ளோ நாள் கேட்டுட்டு இருந்தியே... இத்தன நாள் எனக்கு கொடுத்ததுக்கு நான் திருப்பி தர வேணாமா?!....அய்யய்யோ....டேய்... பொறு பொறு....இங்க போன் சத்தம் விட ஆரம்பிச்சுடுச்சு... என்கிட்ட வேற இன்னும் ரெண்டு ரூபாதான் இருக்கு ...சீக்கிரம் பேசுடா... இதோ பாரு... இன்னைக்கு ராத்திரி நாங்க ஊருக்கு வரோம்... காலைல முதல் வேலையா உன்னை பாக்குறேன்...அதே சாமியார் மடத்து பூங்கால காத்திரு... ம்ம்ம்... ஒரு 8-8:30 மணிக்கு...சரியா?!.... (கொஞ்சம் குறும்புடன்)...ஆனா ரொம்ப ஆசைப்பட்டுக்காத.... நீ தர்ற மாதிரி கன்னதுலல்லாம் தர மாட்டேன்....உச்சந்தலையிலதான்... அதும் ஒன்னே ஒண்ணுதான்...சரியா?! (சிரிக்கிறாள்).
ஜனார்தன்:(கொஞ்சம் குறும்புடனும் ஏக்கத்துடனும், அவளது பேச்சை இடை மறிக்கும் குரலுடன்)அவ்ளோதானா?!...அட ச்சே...இப்பக்கூட இவ்ளோதானா?!(பொய்யான அலுப்புடன்...) கொடுமை.. அப்புறம்?!?
ஜோதி: ஓய்..... ரொம்ப பேசாத.... பயந்தாங்கொள்ளி... சரி சரி... அப்புறம்....ம்ம்ம்(குரலில் கிண்டல் கலந்து கொல்கிறது)... அப்புறம்.... ம்ம்ம்ம்... (சற்றே கூச்சத்துடன்)... கொஞ்ச நாள்ல கல்யாணம்.... அப்புறம்....ம்ம்ம்... ஏதேதோ... அப்புறம்.... கொழந்தைங்க... ஆனா நம்ம கொழந்தைங்கள அந்த சரவணன்(பக்கத்து வீட்டு 8 வயதுப் பையன்) படிக்கரானே அந்த ஸ்கூல் லதான் விடனும்...சரியா?! அதுங்களுக்கு கிரிக்கெட் கத்து கொடுக்கணும்.. படிப்பு, வெளையாட்டு...ரெண்டுலையும் நம்ம புள்ளைங்க first வரணும்... ரெண்டு பெத்துக்கலாம்...நீ கேட்ட மாதிரி ஒரு பையன்... எனக்கு ஒரு பொண்ணு...அதுங்களுக்கு நல்ல நல்ல டிரஸ் வாங்கித் தரனும்...ஆட்டோ ல ஸ்கூல் கு அனுப்பனும்.... பொங்கலும் பூரியும் அடிக்கடி செஞ்சு தரனும்... இதுக்கெல்லாம் நீதான் வேலை செஞ்சு காசு தரனும் வீட்டுக்கு... (சிரிக்கிறாள்....அவனும் சிரிக்கிறான்).... சரிசரி..... நான் வைக்கறேன்.... இல்லைனா கட் ஆகிடும்... டாட்டா டாட்டா...
ஜனார்தன்:அட பொறு டி... பொறு... பொறு...
ஜோதி:டேய்...டைம் ஆச்சுடா...இன்னும் பத்து நொடி கூட இல்லடா...
ஜனார்த்தன்:ஒன்னே ஒன்னு வாங்கிட்டு போயிடேன்?!
ஜோதி: போடா லூசு... நாளைக்கு நானே தரேன்... இப்ப ஆளை விடு... நான் போன்-ஐ வைக்கறேன்... போடா...
இப்படி ஒரு உரையாடல் இந்த இருவருக்கிடையில் நடந்ததா இல்லையா என்று நமக்குத் தெரியாது... ஆனால் இருவரும் பேசி இருந்தால் அந்தப் பேச்சு "அந்தக் கட்டத்தில்" இப்படித்தான் இருந்திருக்கும்...
"அந்தக் கட்டம்" எது?! இதற்கு முன்னும் பின்னும் நடந்தது என்ன?! இது சுகமான காதல் கதையா... இல்லை சோகத்தில் முடிந்த கதையா?! 16-07-2008 ஹிந்து நாளிதழ்(விசாகபட்டினம் பதிப்பு) படித்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்...
இது ஆந்திரப் பிரதேசத்தில் ghanapur கிராமத்தில் நடந்த , சோகத்தில் முடிந்த கதை...

நானும்...
ஊருக்குள்ள எல்லாரும் blog எழுத ஆரம்பிச்சுட்டாங்க.... நாம எழுதலனா, ஒருத்தன் மதிக்க மாட்டான் நம்மள... அதனால நானும். சின்ன வயசுல first time எழுதிப் பழகும்போது எவ்வளவோ கிறுக்கித் தள்ளி இருக்கேன்;) அப்போல்லாம் ரொம்பக் கேவலமா இருக்கும்... அப்புறம் எழுதி எழுதிப் பழகினதும் ஓரளவு சுமாரா வந்துடுச்சு:)....அதே போல இதையும் தேத்திட மாட்டோம்?! சரி...சரி... ஓவரா வேணாம் னு நெனைக்கறேன்.... நேரா கிறுக்க ஆரம்பிக்கலாம், அடுத்த போஸ்ட் ல இருந்து... நான் பயங்கர determined டா இருக்கேன், நான் எழுதறத படிச்சுட்டு கொஞ்சம் பேருக்காவது வாந்தி பேதி ஆகணும்....கொஞ்சம் பேருக்காவது fits வரணும்.... கொஞ்சம் பேருக்காவது BP எகிரனும்... இப்டி சாதிக்க வேண்டியது எவ்வளோவோ இருக்கு:)...... நம்ம எழுத்தோட effect ரொம்ப தெளிவா evidentaaa தெரிய வேணாம்?!? ம்ம்ம்....
Subscribe to:
Posts (Atom)