ஜோதி: கண்டிப்பா நாளைக்கு மீட் பண்றோம்...சரியா?!
ஜனார்தன்:தேங்க்ஸ் டி. இப்பவாது உங்க வீட்டுல மனசு வந்து ஒத்துக்கிட்டாங்களே....... (பெருமூச்சோடு) ...ம்ம்ம்... ஆனா எனக்கு இன்னுமே பயமா இருக்குடி.... என்னமோ தெரியல... உங்க வீட்டை நெனச்சாலே... காட்டு மிராண்டிக் கூட்டம்தான் ஞாபகத்துக்கு வருது.... என்னோட friends கூட சொல்லிருக்காங்க...
ஜோதி: (கேலிக்குரலில்) ஐய.... இப்படி பயந்து சாவுறியே... உனக்கு லவ்வு வேற?!?! எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?!(துள்ளும் குரலில்)ம்ம்ம்... நீ சொல்லிட்டு இருப்பியே.... எங்க வீட்டுல மட்டும் accept பண்ணிட்டா , நீ எனக்கு dowry தந்து கல்யாணம் பன்னிக்குவே னு ....மவனே அதுக்கு ரெடி ஆகிக்கோ.... சொன்ன படி எனக்கு dowry தரனும்...(சிரிப்புடன்)...ஆமா... கன்னத்துல தருவியா... கண்ணுல தருவியா.. மூக்குல தருவியா.... இல்ல காதுல தருவியா?!?! நீ எனக்கு சத்தியம் பண்ணினதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல?!(குறும்பு தொனிக்கும் குரலில்) ....
ஜனார்தன்: கண்டிப்பா.... ச்சே ச்சே... இதெல்லாம் மறக்கற விஷயமா??!.... சரி...சரி... ஆனா அதுக்கு முன்ன இந்த வார கடன் மிச்சம் இருக்கே..?!?! (குறும்புடன்)....
ஜோதி: டேய்...வேணாண்டா.... (சிரிப்புடன்).... ம்ம்ம்.... (கொஞ்சம் யோசித்து) ஆமா இப்ப எதுக்கு தயங்கணும்?!?! இப்பதான் எல்லாருக்குமே தெரியுமே?!?யாருக்கு பயப்படனும்?! எப்படியும் நம்ம கல்யாணத்த யாராலையும் இப்போ தடுக்க முடியாது... (குறும்பு கொப்பளிக்கும் குரலில்)அதனால நீ இவ்ளோ நாள் கேட்டுட்டு இருந்தியே... இத்தன நாள் எனக்கு கொடுத்ததுக்கு நான் திருப்பி தர வேணாமா?!....அய்யய்யோ....டேய்... பொறு பொறு....இங்க போன் சத்தம் விட ஆரம்பிச்சுடுச்சு... என்கிட்ட வேற இன்னும் ரெண்டு ரூபாதான் இருக்கு ...சீக்கிரம் பேசுடா... இதோ பாரு... இன்னைக்கு ராத்திரி நாங்க ஊருக்கு வரோம்... காலைல முதல் வேலையா உன்னை பாக்குறேன்...அதே சாமியார் மடத்து பூங்கால காத்திரு... ம்ம்ம்... ஒரு 8-8:30 மணிக்கு...சரியா?!.... (கொஞ்சம் குறும்புடன்)...ஆனா ரொம்ப ஆசைப்பட்டுக்காத.... நீ தர்ற மாதிரி கன்னதுலல்லாம் தர மாட்டேன்....உச்சந்தலையிலதான்... அதும் ஒன்னே ஒண்ணுதான்...சரியா?! (சிரிக்கிறாள்).
ஜனார்தன்:(கொஞ்சம் குறும்புடனும் ஏக்கத்துடனும், அவளது பேச்சை இடை மறிக்கும் குரலுடன்)அவ்ளோதானா?!...அட ச்சே...இப்பக்கூட இவ்ளோதானா?!(பொய்யான அலுப்புடன்...) கொடுமை.. அப்புறம்?!?
ஜோதி: ஓய்..... ரொம்ப பேசாத.... பயந்தாங்கொள்ளி... சரி சரி... அப்புறம்....ம்ம்ம்(குரலில் கிண்டல் கலந்து கொல்கிறது)... அப்புறம்.... ம்ம்ம்ம்... (சற்றே கூச்சத்துடன்)... கொஞ்ச நாள்ல கல்யாணம்.... அப்புறம்....ம்ம்ம்... ஏதேதோ... அப்புறம்.... கொழந்தைங்க... ஆனா நம்ம கொழந்தைங்கள அந்த சரவணன்(பக்கத்து வீட்டு 8 வயதுப் பையன்) படிக்கரானே அந்த ஸ்கூல் லதான் விடனும்...சரியா?! அதுங்களுக்கு கிரிக்கெட் கத்து கொடுக்கணும்.. படிப்பு, வெளையாட்டு...ரெண்டுலையும் நம்ம புள்ளைங்க first வரணும்... ரெண்டு பெத்துக்கலாம்...நீ கேட்ட மாதிரி ஒரு பையன்... எனக்கு ஒரு பொண்ணு...அதுங்களுக்கு நல்ல நல்ல டிரஸ் வாங்கித் தரனும்...ஆட்டோ ல ஸ்கூல் கு அனுப்பனும்.... பொங்கலும் பூரியும் அடிக்கடி செஞ்சு தரனும்... இதுக்கெல்லாம் நீதான் வேலை செஞ்சு காசு தரனும் வீட்டுக்கு... (சிரிக்கிறாள்....அவனும் சிரிக்கிறான்).... சரிசரி..... நான் வைக்கறேன்.... இல்லைனா கட் ஆகிடும்... டாட்டா டாட்டா...
ஜனார்தன்:அட பொறு டி... பொறு... பொறு...
ஜோதி:டேய்...டைம் ஆச்சுடா...இன்னும் பத்து நொடி கூட இல்லடா...
ஜனார்த்தன்:ஒன்னே ஒன்னு வாங்கிட்டு போயிடேன்?!
ஜோதி: போடா லூசு... நாளைக்கு நானே தரேன்... இப்ப ஆளை விடு... நான் போன்-ஐ வைக்கறேன்... போடா...
இப்படி ஒரு உரையாடல் இந்த இருவருக்கிடையில் நடந்ததா இல்லையா என்று நமக்குத் தெரியாது... ஆனால் இருவரும் பேசி இருந்தால் அந்தப் பேச்சு "அந்தக் கட்டத்தில்" இப்படித்தான் இருந்திருக்கும்...
"அந்தக் கட்டம்" எது?! இதற்கு முன்னும் பின்னும் நடந்தது என்ன?! இது சுகமான காதல் கதையா... இல்லை சோகத்தில் முடிந்த கதையா?! 16-07-2008 ஹிந்து நாளிதழ்(விசாகபட்டினம் பதிப்பு) படித்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்...
இது ஆந்திரப் பிரதேசத்தில் ghanapur கிராமத்தில் நடந்த , சோகத்தில் முடிந்த கதை...
No comments:
Post a Comment