Friday, March 4, 2011

பயணம்-1 - திருவாரூர் நோக்கி...2






இந்தப் படத்தைப் பார்த்ததும் சிலருக்கு எளிதில் இது திருவாரூர் கமலாலயம் தாமரைக்குளம் என்பது தெரிந்துவிடும். சிலருக்கு இது 20 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது என்பது தெரியும்...சிலருக்கு இதில் தெப்பத் திருவிழா நடத்தப்படுவது தெரியும்; 10 நாட்கள் உற்சவம் நடத்தப்படுவது தெரியும். பலருக்கு பார்த்ததும் பக்திப் பரவசத்தில் உற்சாகம் ஊற்றெடுத்து ஓடும்.

ஆனால் நமக்கு.....
இந்தக்குளம் வேறு வகைப்பட்ட உணர்வுகளைத் தருவதைத் தவிர்க்க முடியவில்லை.

இன்று இப்படித் தோற்றமளிக்கும் இந்தக்குளத்தின் வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்த போது, மக்கள் மறந்துவிட்ட... அல்லது அவர்களிடமிருந்து பெரிதும் "மறைக்கப்பட்டுவிட்ட" வரலாறு தெரியவந்தது. எம்மனதில் துன்ப அலைகள் மோதின. அடுத்த பதிவில் இந்தக்குளத்தின் அடியில் புதைந்து போன, புதைக்கப்பட்டு விட்ட உண்மைகளைப் பதிக்க முயற்சிக்கிறேன். 

பூங்காவின் அழகைப் பற்றிக் கூற இங்கு பலர் தயாராக இருக்கையில்(*), அதே பூங்காவில் மலர்செடியின் அடியில் மறைந்திருக்கும் நாகத்தைப் பற்றியும் அதன் நச்சைப் பற்றியும் எடுத்துக்கூற வேண்டியது நமது கடமை என்று நாம் எண்ணுகிறோம்.


No comments: