Thursday, October 22, 2015

என்னை ஏமாற்றி வந்த நிலா !

இந்த நிலா ரொம்பப் பொல்லாததுதான். நீங்க நம்புவீங்களோ மாட்டீங்களோ, ஆனால் அதான் உண்மை!

இத்தனை நாளாய் என்னையும்.... ஏன் உங்களையுமே,   எல்லாரையுமே ஏமாற்றி வந்திருக்கே! மனுசன் இந்த உலகத்துல தோன்றின நாள்தொட்டு இப்போ வரைக்குமே ஏமாத்திட்டு வந்திருக்கு! உண்மைதாங்க. நம்புங்க!!



வழக்கம் போல ஏதோ ஒரு ஆங்கிலப் புத்தகத்தை நோண்டிக்கொண்டு இருக்கையில் இந்த விசயம் எனக்குத் தெரிய வந்தது. உடனே உங்களுக்கும் சொல்லணும்னு தோணிச்சா.......அதான் இந்தப் போஸ்ட்!



முழுநிலா அடிவானத்துல, உதிக்கும்போது கண்டிப்பா நீங்க எப்போதாவது பார்த்திருப்பீங்க. அடிவானத்துல இருக்கும்போது அந்த நிலா உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?



வழக்கத்துக்கு மாறா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சா ?!

 சரி.

*******************************************************************

அதே நிலா ....அதே நாள் இரவுல.... நடு இராத்திரியில...... வானத்து உச்சியில.....உங்க தலைக்கு நேர் மேல இருக்கும்போது பார்த்திருக்கீங்களா?! அப்போ எப்படி தெரிஞ்சுது?

வழக்கம்போல சாதாரண அளவுல சின்னதா தெரிஞ்சுதா?!

இதுவும் சரி!

************************************************


அப்படினா..... ஒரே நாள் இராத்திரியில 7 மணிக்கு பெருசா தெரிஞ்ச அதே நிலா....நடுச்சாமம் 12 மணிக்கு சின்னதா சுருங்கிப்போச்சா?

நிலா கண்டிப்பா வளராது...சுருங்காது...! ஆனா ஒரே நாள் இராத்திரியில அது ஏன் ஆரம்பத்துல பெருசாவும் அப்புறம் சிறுசாவும் தெரியுது?!!?!



அது வேறொண்ணுமில்ல!.... வடிவேலு சொன்ன மாதிரி....மூக்கு வெடப்பா இருந்தா.....இந்த மாதிரியெல்லாம் யோசிக்கச் சொல்லும்!



விசயத்துக்கு வருவோம்.
நிலாவோட அளவு 7 மணிக்கு எப்படி இருந்துதோ, அப்படியேதான் 12 மணிக்கும் இருக்கும், அப்படியேதான் காலை 5 இல்ல...6 மணிக்கும் இருக்கும்.
சந்தேகமா இருந்தா நீங்களே அளந்து பாத்துக்கலாம், 7 மணிக்கும் 12 மணிக்கும்...திரும்ப காலை 5 மணிக்கும்....

அளவு மாறவே மாறாது !

அப்புறம் ஏன் ஒரு சமயம் பெருசாவும் இன்னொரு நேரம் சிறுசாவும் தெரியணும்?


அதுதான்....காட்சிப் பிழை...! தமிழ்ல சொன்னாப் புரியாது-னா..... ஆங்கிலத்துல ஆப்டிகல் இல்யூசன். geometrical-optical illusion.

போன்சோ (ponzo) அப்படிங்கற ஒரு இத்தாலிநாட்டுக்காரர்தான் இதைக் கண்டுபிடிச்சவர். இதை-னா நிலா ஏன் இப்படி சிறுசும் பெருசுமா தெரியுது-னு கண்டுபிடிச்சவர்.



அடிவானத்துல நிலா இருக்கும்போது, அது பக்கத்திலேயே ஏதாவது சில பொருட்களோ, மலையோ, மரமோ, குன்றோ, காடோ, ஆறோ, ஏரிக்கரையோ, படகோ, படகு மிதக்கும் கடற்கரையோ.....பூக்களும் செடிகளும் நிறைஞ்ச சமவெளியோ பயிரிடப்பட்ட நிலமோ.....சாலையோ.... வாகனமோ..... மாடோ... ஆடோ....  ஏதோ விலங்கோ.... கட்டிடமோ..... குடிசையோ.... பாலமோ..... மொபைல் டவரோ.... மின்சாரக் கம்பமோ... இப்படி...ஏதோ ஒரு நல்லாத் தெரிஞ்ச பொருட்கள் அந்த நிலவுக்குப் பக்கத்தில.... அடிவானத்துத் தரைல இருக்கும்...  இப்படிப்பட்ட எல்லாப் பொருட்களோட பருமன் அளவு நமக்கு நல்லாவே தெரியும்.....தினமும் பாக்குற பொருட்கள்தானே...


அந்தப் பின்புலத்துலதான் நாம நிலாவப் பாக்குறோம். கண்ணு நிலாவ மட்டும் தனிய்ய்ய்ய்ய்யா பாக்காம.... அதோட பக்கத்துல பேக்-கிரௌண்டுல .... சுற்றி இருக்க பொருட்களோட சேர்த்துதான் பாக்கும்.....

மூளைக்கு என்ன தோணும்னா......" அடேங்கப்ப்ப்பா......இந்த மரம்.. மலை... மாடு .... ஆடு...... பஸ்சு.... பாலம்.... வீடு.... குடிசை.... இது எல்லாலாத்தையும் விட....  இந்த நிலா பெருசாத் தெரியுதே....!!அப்ப இந்த நிலா எத்தாந் தண்டியா இருக்கும்?!........ பயங்ங்ங்ங்ங்ங்கரப் பெருசா இருக்கேப்பா!!!!" அப்படின்னு உங்களுக்குத் தோண வைக்குது....

அதே நிலா....நாடு இராத்திரி உச்சியில இருக்கையில....பக்கத்துல...இந்தப் பொருட்கள் எதுவுமே இருக்காது..... பரந்து விரிஞ்ச வெறும் வானம் மட்டும்தான் பின்புலத்துல இருக்கும்......நிலாவோட அளவு ஒப்பீடு செய்ய ஒண்ணுமே இருக்காது நிலாப் பக்கத்துல.....

உடனே மூளை..." அட.....இம்புட்டுத்தானா?! பெருசு-ன்னு நெனச்சோம்...ஆனா இத்தாம் பெரிய வானத்துல, நிலா....ரொம்பச் சிறுசா இருக்கேப்பா" ன்னு உங்களுக்குத் தோணவச்சிரும்.

பஸ்சு...குடிசை...மலை.... மரம்...- இதவிட பெரிசா தெரிஞ்ச நிலா.... பெரிய்ய்ய்ய்ய வானத்தோட ஒப்பிட்டுப் பார்த்தா.... சின்னதாத் தெரியுது.

நாமளும் இதுதான் உண்மை-ன்னு இத்தன நாளா நெனச்சிட்டு இருக்கோம்! ஆனா உண்மையில....நிலா ஒரே அளவுலதான் இருக்கு.

பக்கத்துல இருக்க பொருட்களோ.....அல்லது வானமோதான்.... நிலாவ பெருசாவும், சிறுசாவும் தோண வைக்குது!




காரணம் போன்சோ இல்யூஷன்!

போன்சோ இல்யூசன் என்ன சொல்லுதுன்னா.....மூளை, ஒரு பொருளை அதோட பக்கத்துல இருக்க, பருமனளவு தெரிஞ்ச, வேற பொருட்களோட எப்போதுமே ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியது! அப்படி ஒப்பிட்டுப் பார்த்துப் பார்த்துதான், பொருட்களோட ' ஒப்பீட்டளவை-பருமனை ' தோராயமா தெரிஞ்சு வச்சிக்கும்.

நிலா விசயத்துலயும், அப்படியே பருமனளவு தெரிஞ்ச பொருட்களோட ஒப்பிட்டுப் பார்க்கிறதாலதான், ஒப்பீட்டளவுல நிலா ரொம்ப பெருசு-ன்னு மாலை 7 மணிக்கு  மூளை நெனைக்குது.

அம்புட்டுத்தேன்!
நீங்களே சொல்லுங்க...? ஏமாந்துதானே போனோம் இதுவரை ?!

courtesy: all those websites from which i took all the images here.

PS: இது தெரியாம இருந்தோம்னு வச்சிக்கோங்க, சந்திரோதய நேரத்துல, கடவுளோட கருணைப் பார்வை நம்ம மேல படும்...அதான் நிலா பெருசாத் தெரியுது-ன்னு கெளப்பி விட்டுருவானுங்க. இல்லனா, மோடியோட சொந்தத் திறமையால அடிவானத்துல இருக்க நிலாவுக்கு ஆர்டர் போட்டுட்டாருன்னு கெளப்புவானுங்க!

No comments: