Wednesday, December 29, 2010

மூணு பேரு மொபைல் வாங்கப் போன கதை...1

விஜ்ஜு: டேய் புலி….என்ன மொபைல் வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டியா?! 
எழில்: பண்ணியாச்சு மச்சி…. ஆனா...(யோசித்துக்கொண்டே)காசுதான் கொஞ்சம் கொறைவா இருக்கு….(கொஞ்சம் கிண்டலாக..)நீ கொஞ்சம் உதவிக்கரம் நீட்டுறது!?
விஜ்ஜு:(கிண்டலாக சிரித்துக்கொண்டே) டேய்…. உனக்கு இல்லாததா?!அதுசரி என்ன மொபைல்!?ஆப்பிள்-ஆ இல்ல...ப்ளாக்பெர்ரியா?! என்னலே முடிவுபண்ணிருக்க?!
எழில்:ம்ம்ம்..(முறைத்துக்கொண்டே) ஆப்பிள் இல்லடா....... ஆரஞ்சு....இல்லைனா வாழைப்பழம்.... வாங்கலாம்னு இருக்கேன்....வெளக்கெண்ண .. 
விஜ்ஜு:(இன்னும் அதிகமாக சிரித்துக்கொண்டே)....டேய்...புலி....இப்ப ஏன் டென்ஷன் ஆகுற....காசுதான வேணும்? எவ்ளோ வேணும்னு சொல்லு.
எழில்: (முறைத்துக்கொண்டே)ஏன் சுடச்சுட பிரிண்ட் பண்ணி தரப்போறியா?!...(உடனே சமாதானமாகி...) டேய் வெண்ண... நெஜமாவே காசு வேணும்டா வெண்ண....உங்கிட்ட எவ்ளோ இருக்கு இப்ப?!
பொற்கோ(சிரித்துக்கொண்டே): ஏங்க…. விஜயன்கிட்ட கேட்டா கிட்னிய கூட வெட்டி வித்து காசு கொடுப்பாப்ல…நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..அவர கேளுங்க கூச்சப்படமா…எத்தன கோடி வேணும்,சொல்லுங்க….விஜயன் தருவாப்ல...
எழில்:(நக்கலாக..) கிட்னிய வித்தா?!யோவ், உனக்கு மேட்டர் தெரியாதா? அவனுக்கு கிட்னி ஸ்டோன் ஒரு கிட்னில மட்டும் ஏன் வந்துதுன்னு தெரியுமா தெரியாதா?
பொற்கோ(சிரித்துக்கொண்டே):ஏங்க?
எழில்(சீரியஸாக): அவனுக்கு சின்ன வயசுல ஒரு சொறி நாய் கடிச்சதுல பாய்சனாகி இன்னொரு கிட்னி அழுகிப் போச்சு...
பிரபாகரன்(சிரித்துக்கொண்டே):யோவ்…அது மட்டுமா.. போன மாசம்தான்யா எனக்கு ஒரு கண்ண புடுங்கி கொடுத்தான்…அவனோட வலதுகண்ணு கழுதைக் கண்ணு….ஒரிஜினல் மனுஷக்கண்ணு இல்ல,தெரியுமா?
பொற்கோ:ஹ ஹா ஹாஹ்...ஏய் பொறு…ஆமா போன மாசம் நீ எதுக்கு காசு வாங்கின?
பிரபா:வேற எதுக்கு…(எழிலை பார்த்து,நமுட்டு சிரிப்போடு) "நம்ம" மாம்பழத்துக்கு சுடிதார் வாங்கி கொடுக்கத்தான். ;)
பொற்கோ: யோவ்...என்னது..."நம்ம" மாம்பழமா?!...அது எப்ப இருந்து "நம்ம" மாம்பழமா ஆச்சு...?!
விஜ்ஜு: சுடிதார் மட்டும்தானா…..?!?!?....இல்ல…. வேற ஏதும் இல்லையே?!?! (நமுட்டு சிரிப்போடு எழிலை பார்க்கிறான்)
பொற்கோ:(சிரிப்புடன்) ஏங்க(எழிலை பார்த்து)பாருங்க....மாம்பழம் உங்க ஆளுன்னு தெரிஞ்சும் எப்டி பேசுறான் பாருங்க…உங்களுக்கு கோவம் வரலையாங்க? இதையெல்லாம் தட்டி கேக்க மாட்டீங்களாங்க?
எழில்:அட போயா...என்னமோ அவ வந்து என்கிட்ட டெய்லி கொஞ்சிட்டு போறமாதிரி... என்னோட ஆளுன்னு சொல்ற….?
இடை மறித்து….
பொற்கோ:யோவ் பிரபா….என்ன இன்னிக்கு dutyக்கு போகலையா?!?! அங்க பாரு shiftbus வந்துடுச்சு…. மறந்து போய் எங்களோட வந்துறப் போற…கெளம்பு…கெளம்பு….
பிரபா(எரிச்சலுடன்..): ஐயோ….இவனுங்க எதுக்குதான் கரெக்ட் டைம்க்கு வந்து தொலைக்கரானுன்களோ தெரியல…(விஜ்சுவிடமிருந்து சிகரெட்டைப் பிடுங்கிக்கொண்டே…)….ங்கொய்யால …இங்க குடுக்க மாட்ட நீ…. வண்டி இங்க வரதுக்குள்ள ரெண்டு puff இழுத்துட்டு தரேன்யா….நீயே புடிச்சு உறிஞ்சினு இருக்க?!..
அவசர அவசரமாக இழுக்க ஆரம்பித்து,வண்டி வரவும் சிகரெட்டோடு ஓடிச்சென்று ஏறிக்கொண்டான்.
விஜ்ஜு(சத்தமாக):டேய்...கேண... கொடுத்துட்டு போடா.. சிகரெட்ட வச்சி வண்டிய கொளுத்தவா போற?
பிரபாகரன்(சிரித்துக்கொண்டே): வந்து உன்ன கொளுத்தரேண்டி...
பஸ் போய்விட...சிகரெட்டுக்கும் டீக்கும் காசு கொடுத்துவிட்டு ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்...


இந்த கூட்டத்தைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்... விஜ்ஜுவும் எழிலும் கிளாஸ்மேட்ஸ்...பொற்கோ எழிலோட ஸ்கூல் ஜூனியர்...பிரபா விஜ்ஜு-எழிலோட காலேஜ் ஜூனியர்...இது தவிர இவங்க கூட்டத்துல சக்கு(சக்கரவர்த்தி), சிங்கம்(ராஜன்), முருகன், ரெட்டி(இந்திர சேனா ரெட்டி)ன்னு சிலர்வேற இருக்காங்க... சக்கு, ரெட்டி விஜ்ஜு- மூணுபேரும் எழிலோட கிளாஸ்மேட்ஸ். இந்த மொத்த கூட்டமும் ispat என்ற இரும்புக்கடைல, எஞ்சினீயர்ங்கற பேருல குப்பை அள்ளிட்டு இருக்காங்க....ஆனா வெளிய கேட்டா LN.மிட்டல் தம்பி கம்பனிதான் ispat industries. அங்க "வேலை" பாக்குறோம்னு சொல்லுவானுங்க. இங்க நவி மும்பைல ஒரு suburban பேரு பன்வேல்....அதுல நியூ பன்வேல்ங்கற ஏரியால sertor -15 ல கௌதம் அபார்ட்மென்ட்ல 3 ப்ளாட்ல இருக்கானுங்க..2 பெட்ரூம் ப்ளாட்ஸ்... 


போனவாரம் எழிலோட மொபைல் தண்ணில விழுந்து கெட்டுப்போனதால(சாக்கடைல விழுந்து கெட்டுப்போச்சா ...!?!? இல்ல... கக்கூஸ்ல விழுந்து கேட்டுப்போச்சானு இன்னும் ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு...பலர் பல விதமா சொல்றாங்க ;-) )புது மொபைல் வாங்கணும்னு முடிவு பண்ணி அட்வைஸ் பண்ணவும் ஐடியா கொடுக்கவும் ஒரு கூட்டம் சேர்த்து "வாஷி"ங்கற இன்னொரு ஏரியாவுக்கு படை எடுத்துத்துட்டு இருக்கான். இவனுங்க அபார்ட்மென்ட் ரயில்வே ஸ்டேசன்ல இருந்து ஒரு 5 நிமிஷ நடைதான்...அதுக்கு முன்ன ஒரு டீ அடிச்சிட்டு ரிலாக்ஸ்டா ரயில் ஏறலாம்னு நட்டு(நடராஜ்) டீ கடைல டீ, தம் அடிச்சிட்டு இருக்கும்போதுதான் நாம இவனுங்க பேசுறத ஒட்டுக்கேட்டோம்... ஒட்டுக்கேக்குறது தப்பில்லையான்னு யாராவது கேட்டா... "இவனுங்க என்ன பேசிடப்போறானுங்க.... ராணுவ ரகசியமா?! இல்ல சதித் திட்டமா?! ஒரு மண்ணும் கெடையாது... இதை ஒட்டுக் கேட்டா கொஞ்சம் டைம் பாஸ் ...இல்ல டைம் வேஸ்ட் ஆகுமே தவிர...வேற ஒரு தப்பும் ஆகாது"ன்னு நெறைய பேருக்கு சொல்லாமலே தெரியும்.


ஸ்டேஷன் போகும்போதே வம்புக்கதை, வெட்டிக்கதை நெறைய பேசிட்டுதான் போறானுங்க...ஆனா காற்று கொஞ்சம் அதிகமா வீசுறதால என்ன பேசிக்கரனானுங்கனு சரியா, தெளிவா கேக்கமாட்டேங்குது...எழில ஏதோ ஓட்டிட்டே போறமாதிரி தெரியுது.... 

Wednesday, December 22, 2010

நூறாம் மலர்...

நமக்கு தமிழறிவு குறைவுதான் என்றாலும்.... தமிழ்ப் பற்று நிறைய உண்டு... அந்த ஆர்வத்தில் சில சமயங்களில் இன்டர்நெட்டிலும் புத்தகங்களிலும் மேய்வது உண்டு-நுனிப்புல்தான். அப்படி ஒரு சமயம் இங்கே ஒரு வலைதளத்தில் பூக்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று கண்டேன்....சில blogspots ஆக இருக்கலாம்.....எனக்கு சரியாக நினைவில்லை....இன்னொரு தளத்தில் கலைஞர் அவர்களின் கவிதை ஒன்று என் கண்ணில் பட்டது.அந்த தளத்தின் பெயரும் நினைவில் இல்லை... கலைஞர் அவர்களின் கவிதையில் பழந்தமிழர் அறிந்திருந்த மலர்களின் பெயர்களைக் கொண்டு கபிலர் பாடிய பாடலின் எளியநடை இடம்பெற்று இருந்தது. அதைப்பார்த்ததும் அந்தப் பெயர்களனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ளும் ஆசை பிறந்தது...பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிகர் சூர்யா அந்த 99 மலர்களின் பெயர்களைச்சொல்லும் காட்சி நினைவில் வந்தது. ஆனாலும் அனைத்துப் பூக்களின் பெயர்கள் மட்டும் தெளிவாக
கிடைக்கவில்லை....

அது ஒரு புறமிருக்க... சமீபத்தில் மதுரையில் ஒரு புத்தகக் கண்காட்சியில் ஒரு புத்தகம் கிடைத்தது.... "வகைமை நோக்கில்....தமிழ் இலக்கிய வரலாறு "-முனைவர் பாக்கியமேரி.
அந்தப் புத்தகத்திலும் ஒரு நாள் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கையில்...மீண்டும் அதே பூக்களின் பட்டியல்....

பண்டைய தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என்று ஒரு பாடல் தொகுதி. அதில் ஒரு பாட்டு கபிலரின் குறிஞ்சிப் பாட்டு.ஒரு பாட்டு என்றால் ஒன்றே ஒன்று அல்ல.....பல சிறு பாடல்களின் தொகுப்பு... அனால் அந்த பாடல்கள் அனைத்திற்கும் ஒரு தெளிவான பின்புலம், theme, அடிப்படை ஒற்றுமைகள் உண்டு.... பெயருக்கேற்றாற்போல் குறிஞ்சிப் பாட்டு என்றால்.....குறிஞ்சி நிலத்தை முன்னிலைப்படுத்திப் பாடப்படும் பாடல்களைக் கொண்டது என்பது தெளிவாகவே புரியும்... குறிஞ்சி நிலத்திற்குரிய சிறப்புகளை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்டிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.அதாவது....அந்நிலத்திற்குரிய கருப்பொருள், முதற்பொருள், உரிப்பொருள், திணை ஒழுக்கம் முதலியவை பற்றிய குறிப்புகள் அடங்கி இருக்கும். அந்நிலத்தின் அன்றாட நிகழ்வுகள்கூட சிறப்பிடம் பெற்றிருக்கும். நம்மை பழந்தமிழ் நிலச் சிறப்புகள் அனைத்தும் கவர்ந்தாலும், கபிலரின் தேன் போன்ற அந்தப் பாடலில் வரும் பூக்களின் பெயர்த்தொகுப்பு நம்மை வண்டாக்கி விட்டது என்றே சொல்லலாம்.

அந்த நூறு மலர்களின் பட்டியல் இதோ..
1.செங்காந்தள்
2.ஆம்பல்
3.அனிச்சம்
4.செங்கழுநீர்
5.குறிஞ்சி
6.வெட்சி
7.செங்கோடுவேரி
8.தேமா
9.செம்மணி
1௦.பெருமூங்கில்

11.கூவிளம்( வில்வம்)
12.எறுழம்
13.மராமரம்
14.கூவிரம்
15.வடவனம்
16.வாகை
17.வெட்பாலை
18.பைஞ்சாய்க் கோரை
19.வெண்காக்கணம்
20.கருவிளம்

21.பயனி
22.வானி
23. குரவம்
24.பச்சிலை
25.மகிழம்
26.காயா
27.ஆவிரை
28.சிறுமூங்கில்
29.சூறை
30.சிறுபூளை

31.குன்றி
32.முருக்கிளை
33.கோங்கம்
34.மருதம்
35.பேரங்கம்( மாஞ்சாடி)
36.திலகம்
37.பாதிரி
38.செருந்தி
39.அதிரல்( புனலி)
40.சண்பகம்

41.கரந்தை
42.குளவி
43.மா
44.தில்லை
45.பாலை
46.முல்லை
47.குல்லை
48.பிடவம்
49.சிறுமாரோடம் (செங்கருங்காலி)
50.வாழை

51.வள்ளி
52.நெய்தல்
53.தாழை
54.தளவம்( செம்முல்லை)
55.தாமரை
56.ஞாழல்
57.மௌவல்
58.கொகுடி
59.சேடல்
60.செம்மல்(சாதி)

61.குரலி
62.கோடல்(வெண்காந்தள்)
63.கைதை(தாழை)
64.சுரபுன்னை
65.காஞ்சி
66.குவளை
67.பாங்கர்(ஓமை)
68.மராஅம்(மரவம்)
69.தணக்கம்
70.ஈங்கை(இண்டம்)

71.இலவம்
72.கொன்றை
73.அடுப்பம்
74.ஆத்தி
75.அவரை
76.பகன்றை
77.பலாசம்
78.பிண்டி(அசோகம்)
79 .வஞ்சி
80.பித்திகம்(பிச்சி)

81.சிந்துவாரம்(கருநொச்சி)
82.தும்பை
83.பித்திகம்(திருத்துழாய்)
84.சிந்துவாரம்(தோன்றி)
85.நந்தி(நந்தியாவட்டம்)
86.நறவம்
87.புன்னாகம்
88.பாரம்(பருத்தி)
89.பீரம்(பீர்க்கம்)
90.குருக்கத்தி(மாதவி)

91.ஆறாம்(சந்தனம்)
92.காழ்வை(அகில்)
93.புன்னை(பெரும்புன்னை)
94.நரந்தம்(நாரத்தம்)
95.நாகம்
96.நல்லிருள்நாரி(இருவாட்சி-இருள் வாசி-இருள் ஆட்சி)
97.குருந்தம்
98.வேங்கை
99.புழக்கம்(எருக்கம்)

கபிலர் பாடலில் 99 மலர்கள் இடம்பெற்று இருந்தாலும், 100 என்று இல்லாமல் இருப்பது பெயர்ப் பட்டியல் முழுமை பெறாதது போல் ஒரு உணர்வைத் தருகிறது. அதோடு....எனக்கென்னவோ அவரது காலத்தில் பஞ்சம் வந்ததோ என்று கூட எண்ணத் தோன்றியது....


பட்டியலை முழுமை செய்ய, கவிஞர் கபிலரின் கண்ணில் படா மலரொன்று என் கண்ணில் பட்டதே அப்படி எண்ணச் செய்தது என்பதோடு....என்னவளுக்காக நான் காத்திருக்கும் இந்த 3 ஆண்டுகள் பெரிய வியப்பு என்ற எண்ணமும் உடைந்தது. ஈராயிரம் ஆண்டுகளாக ஒரு அழகிய தமிழ்ப் பாடலொன்று இவளது பெயர் சேரக் காத்திருந்ததென்றால்..., 'ஈராயிரம் ஆண்டுகளாக, ஒரு குறையுமற்ற, அழகிய பூக்களின் கூட்டமொன்று உனக்காக தவம் செய்தது என்றால்....சாதாரணமான நான் காத்திருக்கும் இந்த மூன்று ஆண்டுகள்.... கணக்கிலே வராதோ கண்மணியே?!'

தேனெடுக்கும் ஈக்களுக்கு ராணி உண்டென்றால்,
தேன் கொடுக்கும் பூக்களுக்கும் ராணி?! 

100 .மலர்விழி.

Sunday, December 19, 2010

TR and SHAKESPEARE

In electronic media, many would have noted the madness of TR; but there r certain moments when TR has risen to the level of a genius,and we could not avoid noticing this TOO. this is one such.

here's a sitution: rejected love.hero is hopeless that his love would succeed in future.
now...he is made to express his DISAPPOINMENT and his DESIRES at the same time.parallelly. he expresses.....and how he does it ?!...like comparing and contrasting. the way of expressing this, is something remarkable.

in thamizh (tamil), there r a variety of figures of speech, of which we know not much.but whenever i listen to this song, it immediately reminds me of one ..அணி (a figure of speech in tamil).இல் பொருள் உவமை அணி. mhmhmm.... simply, உலகில் இல்லாத ஒரு பொருளை உவமையாக்கி(உவமானம்), சொல்லவந்ததை(உவமேயம்) விளக்கிச் சொல்வது. this is repeated in almost everyline of this song.

பாடல் : இது குழந்தை பாடும் தாலாட்டு...
படம் : ஒரு தலை ராகம். 
ஆண்டு : 1980 (?)
பாடகர் : SPB
ஆசிரியர் : TR
இசை : TR
*
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்

*
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்

*
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்;
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்;
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்;
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்;
உறவுராத பெண்ணை எண்ணி நாள்தோறும் வாழ்கிறேன்.

*

இது குழந்தை பாடும் தாலாட்டு;
இது இரவு நேர பூபாளம்.

*
வெறும் நாரில் கரம்கொண்டு பூமாலை தொடுக்கிறேன்;
வெறும் காற்றில் உளிகொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்;
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்;
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்;
விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்.

*
இது குழந்தை பாடும் தாலாட்டு;
இது இரவு நேர பூபாளம்.

*
உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது;
உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது;
உயிரிழந்த கருவைக்கொண்டு கவிதை நான் வடிப்பது;
உயிரிழந்த கருவைக்கொண்டு கவிதை நான் வடிப்பது;
ஒருதலையாய்க் காதலிலே எத்தனை நாள் வாழ்வது.

*
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம். 



youtube(thanks to youtube n the uploader):

*************************************************************************************

and..... almost the same situation arises in one very famous english work of the medieval period.romeo and juliet.

Romeo: Alas that love, whose view is muffled still,
Should without eyes see pathways to his will!
Where shall we dine? O me! What fray was here?
Yet tell me not, for I have heard it all.
Here's much to do with hate, but more with love.
Why then, O brawling love! O loving hate!
O anything, of nothing first create!
O heavy lightness! serious vanity!
Misshapen chaos of well-seeming forms!
Feather of lead, bright smoke, cold fire, sick health!
Still-waking sleep, that is not what it is
This love feel I, that feel no love in this.
Dost thou not laugh?

there's a situation: rejected, unrequited love. hero-romeo is in love with rosalind, but is HOPELESS n DOUBTFUL of the acceptance n approval of his love by his beloved.now... shakespeare makes him express his feelings....he expresses his YEARNING and the reality of not having won his love.and the way of expression should be noticed..... he expresses in OXYMORONS(oxys+moros=sharp+dullness)-a figure of speech in english....like comparing n contrasting.... repeatedly jusxtaposing opposites in many lines....

in both the cases, situation is unaccepted love. in both the cases, TR n shakespeare make their heroes express their unaccepted love thro' a very similar method-comparing their love to very nice, wonderful n sweetest things while equating rejected love to those things that do not exist in the world, just as their most sought love does not exist.like.... seeking love in those ladies is similar to seeking those non-existents of this world.
*
similar situations and similar choice of figures of speech for expression. this is what was the astounding genius of TR then. both TR n shakespeare wrote these plays in the beginning of their careers. while shakespeare's works show a very wonderful maturity(othello,the best) in his later days, TR's do not.rather we find degraded works.yet..... a man now parodied often, had a greatness comparable to the bests of the world.

and...he didnot stop there with just writing..... scored music too...(people with authority in music could appreciate that well,we just relish it). could mockers achieve a bit of what he had done!? we do respect TR for this piece and such.

Tuesday, December 7, 2010

after 2 years...



when i started this blog,i thought of writing endlessly.... but tooooooo lazy to follow my plans, as always... and..though writing in tamil was not a difficulty,waiting for the transliteration to get converted into tamil was testing our patience... soooo what was born with great intentions was left lifeless for almost a couple of years... never did i see this blog in 2 yrs.... now ...when i was reading some tamil poetries, it itched to write something...at least SOMETHING than nothing after such a gap...

not being a native english gives me the freedom to break the limits one has....i mean the grammar of english language....whenever i speak english, many a times i've noticed, tamil-grammar,rather than that of english, taking the prescriptive part as i form sentences.so....as i feel, i have the freedom to make mistakes, errors..... i have the freedom to damage the english language... sooo....please bear with me....


now on.... going to scribble things that come to my mind....lets c if this works as v wish


ya...as i told, i suddenly felt like writing when i was reading a KAVITHAI(poetry?!).... in a webpage....that's


i thank the author for inspiring me to write this piece....



கடற்கரை மணலில்
தேடிக்கொண்டிருக்கிறோம்;
குழந்தைகள் சிப்பிகளையும்..
நான் உன்னையும்...