Tuesday, December 27, 2016

on kerala and malayalam !

was listening to this for music than watching it for video, now on weekly off....all relaxed.

https://www.youtube.com/watch?v=aPp_i4qzoqI

youtube brings in not just interesting videos, but the comments sections chips in a lottttttttttttttttttttttt of beautiful witty comments/ quotes ;-).

i go thro many of them for their opinion on those videos. and then..... happened to read some nice comments for that video as well.

some guys were soooooooo friendly in their comments and there were responses too. and i happen to respond with some comments. here they go......about the language malayalam.

malayalam has a lottttttttttt of similarities with tamil among other dravidian languages. best thing is...malayalam still retains some beautiful, poetic words from sangam period tamil; sadly those words have become almost archaic in tamil colloquial. and.... i must thank your(or our) king சேரன் செங்குட்டுவன் (Chēran Chenkūttūvan/ Vel Kelu Kuttuvan/ Kadal Pirakottiya Senguttuvan Cheran) for encouraging his brother Ilango Adigal for giving us THE SECOND BEST WORK (after thirukural) in entire tamil literature - SILAPPATIKARAM. he also brought stones from himalaya to construct a temple for kannagi-the heroine of the story. the best part of that work is..... it starts cheerfully in chozha kingdom, reaches climax painfully in pandiyan kingdom and has a cathartic end peacefully in chera kingdom. lovely one. personally, i should be grateful for that extraordinary work of 2nd century. historically....there are many many things closely very very closely relating both the languages and regions. knowing those would only blossom a friendship and even more possibly a brotherhood.

so much i wrote... and thought i would better share that here.....
and
here ..... http://neidhal.blogspot.in/2016/03/kalabhras.html
here..... http://neidhal.blogspot.in/2016/03/kalabhras-2.html
here..... http://neidhal.blogspot.in/2016/04/kalabhras-3-list-of-literary-works.html

are some justifications why i expressed that view in youtube on malayalam.'

and on the relationship between malayalam and tamil, i wrote.....

malayalam has a lottttttttttt of similarities with tamil among other dravidian languages. best thing is...malayalam still retains some beautiful, poetic words from sangam period tamil; sadly those words have become almost archaic in tamil colloquial. and.... i must thank your(or our) king சேரன் செங்குட்டுவன் (Chēran Chenkūttūvan/ Vel Kelu Kuttuvan/ Kadal Pirakottiya Senguttuvan Cheran) for encouraging his brother Ilango Adigal for giving us THE SECOND BEST WORK (after thirukural) in entire tamil literature - SILAPPATIKARAM. he also brought stones from himalaya to construct a temple for kannagi-the heroine of the story. the best part of that work is..... it starts cheerfully in chozha kingdom, reaches climax painfully in pandiyan kingdom and has a cathartic end peacefully in chera kingdom. lovely one. personally, i should be grateful for that extraordinary work of 2nd century. historically....there are many many things closely very very closely relating both the languages and regions. knowing those would only blossom a friendship and even more possibly a brotherhood.

it is for creating curiosity among people so that things are analysed completely from every point of view. and, it shall always bring forth the facts to general public's view.

good day.





Saturday, December 24, 2016

சங்கத்தில் ஓர் முத்து !

சங்கத்தில் ஓர் முத்து !


நன்றி: http://c300221.r21.cf1.rackcdn.com/18-painting-of-ilayarajatamil-artist-1394383234_b.jpg


நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப் 
போதரவிட்ட நுமரும் தவறிலர் 
நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
'பறையறைந் தல்லது செல்லற்க' என்னா
இறையே தவறுடை யான்.


(நன்றி: http://www.garuda-sangatamil.com/pages/seventh/second01-10.php)
சங்கப் பாடல்களில் காதலையும் வீரத்தையும் தலையாய புலமாய் வைத்து ஆயிரமாயிரம் பாடலைகள் உள்ளன.

அகத்திணை 7 வகைப்பட, அவற்றுள் அன்பின் ஐந்திணைகள் தவிர...... கைக்கிளை பெருந்திணையும் கூட அகத்திணையிலேயே இடம்பெறுகின்றன.

கைக்கிளைக்கும் காதலுக்கும் உள்ள மிக எளிதான அடிப்படை வேறுபாடு - அன்பு ஒருதலையானதா, இல்லை இரண்டு உள்ளங்கள் ஒன்று பட்டதா என்பதைப் பொறுத்தது.

தலைவனின் உள்ளத்தில் மட்டுமோ, அல்லது தலைவியின் உள்ளத்தில் மட்டுமோ ஏற்பட்டு, அடுத்தவர் உள்ளத்தில் அதே அன்பு முன்னவர்பால் பிறக்காவிட்டால்..... அது அகத்திணையே ஆனால் கைக்கிளை.

அத்தகைய கைக்கிளை பாடல் ஒன்றின் வரிகள்தான் மேற்கண்டவை.

தலைவன் கூற்றாக அமைந்த வரிகள் இவை....



****************
நான் காதலில் வீழ்ந்தது....

உன்னுடைய தவறில்லை, உன்னை வெளியே
சுதந்திரமாய்ப் போகவிட்ட உன் பெற்றோரின் தவறுமல்ல....

மிகுதியான சேதம் தரும், மதம்கொண்ட யானையை நீரருந்த தெருவழியே குளத்துக்கு அனுப்பும் முன்..... .பறையறைந்து... 'ஆபத்து, தெருவில் செல்லவேண்டாம்' என எச்சரிக்கை செய்வர். அந்த யானைபோல் ஆபத்தான நீயும் தெருவழியே வருகையில், என்னை அப்படி எச்சரிக்கை செய்யாமற் போன.....

அரசனின் தவறே இது.
***************
கைக்கிளையின் கையறுநிலையை இத்தனை அழகாய் எடுத்துச் சொன்னது தமிழ்......2000 வருடங்களுக்கு முன். இன்றைய பல மொழிகளே பிறக்காத அந்நாளில்.

oh my god !!!

happened to read some questions in quora by chance since the questions were very interesting ones.

one question was....How does an atheist define the God(s) that they don't believe in?

i wrote my answer there. further i thought that piece of writing shall be brought here too as i have not had much time to write recently. so... here it goes.....
*************

Every event in the universe has one or more causes and....one or more effects, which in turn become causes for other subsequent events. This continues forever whether there are human beings alive or not. Universe continues to function this way forever.
Generally religious people assume that there is an external agent/power that can influence these causal-effect relationships in favour of/against human beings when pleased/displeased. That external agent has been given the generic identity-god in all religions.
Origins of all religions can be traced to primitive helplessness of humans in the face of dangers posed by nature's elements.
Without any real understanding of the causal-effect relationships of these powerful invincible elements, men chose to subjugate and surrender themselves unto those gods who, people thought, could control these elements. Primitive men thought gods could make elements work in favour of human beings if pleased; else, gods could unleash fury thro elements. Even elements were given the stature of gods/demi-gods; there was, of course, one supreme god with ultimate power over these smaller gods.
Ages ago, men thought that surrendering themselves might please the gods, so that those gods would mean no harm to the surrendered subjects. Or men offered gods some bribe in the name of rituals and offerings begging for something big in return. (Even now men are either afraid of gods or they do pray for favour. Fear and greed are the two emotions are the foundations for acceptance of god.)
As an atheist, i donot believe that such and such a god/power/an agent exists. None whatsoever.
But....... caveat is, everything follows the unverisal law and the causal-relationship cycles that i mentioned at the beginning. If a staunch believer prays intensely to the god, but that doesnot follow these universal laws is doomed. Since there is no god, none can save these gullible when they go against the natural laws.
So, understand these natural laws, and play along; you don’t have to believe in gods. Even if you are a believer, if you play against these laws, you are bound to fail miserable, no matter how strong your belief on gods is. Herein lies the supremacy of universal laws over non-existent gods.

Tuesday, December 20, 2016

களவும் கற்று மற....!

களவு என்ற வார்த்தைக்கு இன்று கற்பிக்கப்படும், புரிந்துகொள்ளப்படும் பொருள், அர்த்தம்....திருட்டு; பிறர்க்குரிய ஏதோ ஒரு பொருளை யாரும் அறியாவண்ணம் தான் எடுத்துக்கொள்வது.

ஆனால், சங்ககாலம், களவு என்ற வார்த்தையை காதல் என்ற பொருளிலும் கையாண்டு இருக்கிறது. அதை விளக்கப் பிறந்த பழமொழிதான், களவும் கற்று மற.

களவென்பது பிறர் அறியாவண்ணம் தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்ளும், காதல்வாழ்வின் ஆரம்பகாலத்தை, முற்பாதியைக் குறித்தது.

கற்பென்பது பிறர் அறிய, தலைவனும் தலைவியும், மணம் செய்துகொண்டு, ஒன்றாய்வாழும், குடும்பவாழ்வை, காதல்வாழ்வின் பிற்பாதியைக் குறித்தது.

களவும் கற்று மற என்றால், `ஊரறியாமல் நடக்கும் காதலின் முற்பாதி நடக்கவும் வேண்டும், அனால் விரைவில் அதைத் தாண்டி, மறந்து, கற்பு வாழ்வில், ஈடுபடவும் வேண்டும்' என்ற பொருளைக் குறிக்கவே வந்தது.

`கற்பெனப்படும் குடும்பவாழ்வு, களவெனப்படும் காதல்வாழ்விலேயே தொடங்கவேண்டும். அந்தக் களவும் சிலகாலத்தில் மறக்கப்பட்டு, கற்பெனப்படும் குடும்பவாழ்வு விரைவில் தொடங்கவேண்டும்' என்பதே அந்தப் பழமொழியின் பொருள்.

இப்படி காதல்வழிப்பட்ட குடும்ப வாழ்வை அடிப்படையாய்க் கொண்டு அமைந்தது சங்ககாலத் தமிழ்ச்சமூகம்.

ஆனால்....அதே தமிழ்ச் சமூகம், காதல் என்பதையே கொச்சையான ஒன்றாகப் பார்ப்பது..... காதலைப் பற்றியோ, பண்டைத் தமிழ்ச்சமூகத்தின் அகப்பொருள் வாழ்க்கைமுறை பற்றியோ, அதற்கான உன்னதமான அடிப்படை பற்றியோ..... ஏதுமே அறியாமல்போனதன் விளைவே.

பொய்யான காதலின் பெயரில் நடக்கும் தவறுகளுக்கு..... உண்மையான காதலோ, காதலர்களோ பொறுப்பாக முடியுமா?! அவர்களைப் பழிப்பதுதான் முறையா!?

காதலை, அன்பை அடிப்படையாகக் கொண்டுதான் இல்வாழ்க்கை அமையவேண்டும் என்று 2000 வருடங்களுக்கு முன்பே வலியுறுத்திய அதே  தமிழ்ச் சமூகம், அத்தகைய வாழ்வின் மேன்மையைப் பற்றி முற்றிலும் மறந்துவிட்டு, இயற்கையாய் அன்புபிறக்காத இருவரை இல்வாழ்வில் சேர்த்துவைப்பது.......சாதியத் திருமணங்களின் வெளிப்பாடுதான்; சாதியைக் காப்பாற்றும் முயற்சியின் வெளிப்பாடுதான்.

களவு:
களவு வாழ்க்கை தொடங்கும் விதம் எப்படி என்பதை...... அகப்பொருள் பாடல்கள் மிக அருமையாக, காட்சிகளைக் கொண்டு விளக்கும்.  களவின் முதல்முதல் தொடக்கம்..... மிகத் தற்செயலாக நடக்கக்கூடியது.

தலைவியை தலைவன் முதல்முதலாய்க் காண்பது.....  காட்சி.

தான் காண்பது, " தேவதையோ , மயிலோ, மானிடப்பெண்ணோ....?!" என தலைவன் குழம்புவது.... ஐயம். *

தன் எதிரே இருப்பது ' மனிதப் பெண்தான்' என்று அவளது உடல்மொழி கண்டு உறுதிப்படுத்துவது.... தெளிதல். (உடல்மொழி - கண் சிமிட்டல், கால் தரையில் படுதல்)

`தலைவிக்கும் தன்மேல் விருப்பம் உள்ளது, அவளுக்கும் தன்காதலில் சம்மதம் உள்ளது' என்பதைத் தலைவன் தெரிந்துகொள்வது.... தேறல்.

இயற்கையாகப் பிறக்கும் உண்மைக்காதலின் தொடக்கம், இவ்வாறே அமையும்.

*அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
   மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

இதோடு நின்றுவிடுவதில்லையே அகப்பொருள். மேலும் பின்னால் ஒருநாள்......

நன்றி.

மௌனசாட்சியும் மரங்களும்...

உலகத்திலேயே வயதான, அனால் உயிருடன் இருக்கும் மரம் எது?!

அந்த மரத்தின் இப்போதைய வயது என்ன இருக்கும்!?!?

மனம்போன போக்கில் இலக்கில்லாமல் கையில் கிடைத்ததை எடுத்து வாசிக்கும் என் கண்ணில் பட்ட ஒரு செய்தி, மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் தேடத் தூண்டியது.

சுவீடன் நாட்டில் இருக்கும் ஒரு ஸ்ப்ரூஸ் மரம்தான் மிகஅதிக வயதான மரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதுதான் அந்த ஸ்ப்ரூஸ் மரம்.
http://newsimg.bbc.co.uk/media/images/44578000/jpg/_44578198_oldesttree226b.jpg

இந்த ஸ்ப்ரூஸ் மரத்தின் வயது கிட்டத்தட்ட 10000.....ஆமாம் பத்தாயிரம் வருடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். இந்த மரத்தை குளோன் மரம் என்கிறார்கள். அதாவது, தாய்மரம் 600 வருடங்களில் முதிர்ந்து வாடி மடிந்துவிடுமாம்; அனால், அதன் கீழ்கிளைகள் பனியின் கனம் தாங்காமல் வளைந்து தரையைத் தொட, அவற்றிலிருந்தும்.....மண்ணுக்கடியிலிருந்து வேரிலிருந்தும் புதிய தண்டு முளைத்து மீண்டும் மரமாகி வளருமாம்.  இந்தச் செயல்பாடு கடந்த பத்தாயிரம் வருடங்களாக இந்த மரத்தை மறையவிடாமல் உயிரோடு வைத்திருக்கிறதாம். சுவீடனின் டோலானா மாகாணத்தில், ஃபுலு (fulu mountains) மலைகளில் இந்த மரத்தைக் கண்டு பிடித்தவர் Leif Kullmann என்பவர்.

இதற்கு முன்புவரை இந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது..... Dr Edmund Schulman என்பவர் 1957ல் கலிபோர்னியாவின் வெள்ளைமலைகளில் கண்டுபிடித்த ஒருவகைப் பைன் மரம்தான். அதற்கு Methuselah எனப் பெயரும் சூட்டினார் அவர். அந்த மரத்தின் வயது..... கிட்டத்தட்ட 4770+ எனக் கணக்கிடப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இது குளோனிங் ஆகாத மரம்.



இது ஒரு புறமிருக்க...... ஐரோப்பாவிலேயே வயதான மரம் எனும் பெருமையை இப்போது பெற்றிருப்பது.... Pindos mountains எனப்படும் கிரீஸ் நாட்டு மலைப்பகுதியில், Paul J Krusic என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டு அடோனிஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் வயது கிட்டத்தட்ட 1075 என்று சொல்லப்படுகிறது.
http://www.bbc.co.uk/newsbeat/article/37156471/bosnian-pine-tree-is-europes-oldest-living-thing-at-1075-years-old-say-scientists


இவைதவிர....வேறு பல மரங்களையும் விக்கிபீடியா வரிசைப் படுத்துகிறது.

தூத்துக்குடியில் இருக்கும், சங்ககால பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும், துறைமுகமாகவும் விளங்கிய கொற்கையில்....2000 வருட வயதுடைய வன்னி மரம் ஒன்று இருப்பதாகவும் கேள்வி.



எதுவுமே பேசாத, உணர்வுகள் இல்லாத, மரங்களுக்கு மட்டும் இத்தனை வருட வாழ்க்கை என்பது, ஆறறிவு உள்ள நமக்கு விடைதெரியாத வினோதமே.

இத்தனை வருட வாழ்க்கையில் எத்தனை மனிதர்களை எத்தனை தலைமுறைகளை இந்த மரங்கள் தாண்டியிருக்குமோ. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைக்குச் சொல்லாமலே சென்று விட்ட செய்திகள் இருக்கும்; ரகசியங்கள் பல இருக்கும்; புதைந்துபோன உண்மைகள் பல இருக்கும்; மறைக்கப்பட்டு விட்ட விசயங்கள் இருக்கும்; வரலாற்றிலே மறக்கப்பட்டுவிட்ட, எழுதப்படாத, வாழ்க்கையில் இடம்பெறாத தவறிய எத்தனையோ விஷயங்கள் இருக்கலாம்; அத்தனைக்கும்......இந்த மரங்கள் மௌன சாட்சியாய்.....