Monday, January 24, 2011

ஐந்திணை ஐம்பதில் காதல்...2

ஐந்திணை ஐம்பதுப் பாடல் ஒன்றை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.அந்தப் பாடல் விவரிக்கும் காட்சியைப் பற்றிச் சிறிது விளக்கிவிட்டால் பாடலைப் புரிந்து கொள்வது மிக மிக எளிதாக இருக்கும் என்பதால்....கவிதை காட்டும் காட்சியின் பின்புலத்தைச் சற்று கற்பனை செய்து கொள்வோம்.

பாடலில் இடம்பெறும் நில அமைப்பு பாலை.பாலை நிலத்தில் புலவர் ஒரு காட்சியை காண்கிறார். அது கோடைக்காலக் காட்சி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கோடையின் கொடுமை மட்டுமே தென்படுகிறது. வெவ்வேறு ஊர்களை இணைக்கும் பாதைகளில் ஆள் அரவமற்று இருக்கிறது. காட்டு விலங்குகள் அனைத்தும் கோடை வெப்பத்தின் தாக்குதலுக்கு உட்பட்டு சிறு புதர்களிலும் குத்துச் செடிகளிலும் காய்ந்து போன மரங்களின் கிளை நிழல்களிலும் மறைந்து நின்று இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. மரக்கிளைகளில் பறவைக்கூட்டங்களை அதிகம் காண முடியவில்லை. வெயிலின் தகிப்பிலிருந்து அவைகளும் தப்பிக்க முடியவில்லை. தென்படும் சில பறவைகளும் சிறகை விரித்து வைத்துக்கொண்டு உடற்சூட்டைத் தணிக்க முயற்சிக்கின்றன. புற்களோ இலைதழைகளோ இல்லாமல், அவைகளின் காய்ந்து போன சருகுகள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கண்ணில் படுகின்றன. தூரத்தில் நோக்கினால் கானல்நீர் கண்ணில் படுகிறது.
            அப்படிப்பட்ட கொடைவாட்டும் பாலைநிலத்தில் சிறு நீர்ச்சுனை ஒன்று கண்ணில் படுகிறது. அந்த நீர்ச்சுனையில் இரு மான்கள் நீரருந்துவதைப் புலவர் பார்க்க நேர்கிறது. அவை இணைமான்கள் என்பதும் தெரிகிறது. இந்நிகழ்ச்சியைக் கண்ட புலவர் பாடலைப் புனைகிறார்.  அவற்றில் பெண்மான் நீரைக் குடித்துக் கொண்டிருக்கிறது. ஆண்மானோ நீரைக் குடிப்பதுபோல் பாவனை மட்டுமே செய்கிறது. இது பெண்மானுக்குத் தெரியவில்லை. ஆண்மான் நீரில் வாய் வைத்திருந்தாலும் அந்த நீரை உறிஞ்சிக் குடிக்கவில்லை, ஏனெனில் இருக்கும் சிறிது நீரைத் தான் குடிக்க விரும்பாமல் மிக மென்மையான, வலிமைக் குறைவாக உள்ள தன் பிணை குடிக்க வேண்டும் என்று விரும்புகிறது.ஆனால் தான் உடன்குடிக்கவில்லை என்றால் பெண்மானும் குடிக்க மறுக்கும் என்பதால்தான், தான் உண்மையில் குடிக்காமல் அவ்வாறு வாயை மட்டும் நீரில் வைத்துக்கொண்டிருக்கிறது.
          இருக்கும் சிறிது நீரையும் இருவரும் குடிக்க வேண்டும் என்று பெண்மான் கருத, வலிமையற்ற மென்மையான பெண்மானுக்குத்தான் நீரின் தேவை அதிகம் என்று ஆண்மான் கருதுகிறது.
          இத்தகைய சிந்தனைத்திறன் மான்களுக்கு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் புலவர் காதலின் சிறப்பைப் பற்றிக் கூற முற்படுகையில், அக்றிணை உயிர்களிடத்தில் கூட இத்தகைய மேன்மையைப் புகுத்திக் காட்டுவதன் மூலம் உயர்திணை உயிர்களாகிய மக்களிடம் இன்னும் வலிமையாகக் காதலறம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இலைமறை காயாக உணர்த்துகிறார்.
இத்தகைய காதல் ஒழுக்கம்தான், தியாகம்தான் உண்மைக்காதலரின் கொள்கை, அன்பில் காணக்கிடைப்பது என்று கூறுகிறார் புலவர்.
            காதலுக்கு இத்தகைய இலக்கணம் வழங்கப்பட்டது 1600 ஆண்டுகளுக்கு முன்பு என்பதை கருதுகையில் தமிழரின் மரபு, கலாசாரச்சிறப்பு எத்தனை தொன்மை வாய்ந்தது என்பது தெளிவாக விளங்கும்.
            இந்தப் பாடலில் நம் கவனத்தைக் கவர்ந்த இன்னொரு சிறப்பு, பயின்று வரும் அணி. அது தற்குறிப்பேற்றணி. இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்ச்சியின் மீது, புலவர் தன்னுடைய குறிப்பை ஏற்றிக் கூறுவதால் இதற்கு இப்பெயர். மான்கள் நீரருந்துவது இயற்கை. ஆனால் அவற்றில் பெண்மான் மட்டும் நீரருந்த, ஆண்மான் பாவனை செய்வதாகக் கூறப்பட்டிருப்பது புலவரின் குறிப்பு.

மூணு பேரு மொபைல் வாங்கப் போன கதை...4

பொற்கோ எரிச்சலடைந்து பேசியதைக் கேட்டதும் விஜ்ஜு மெல்லப் புன்முறுவல் செய்யத்தொடங்கினான். இது வழக்கமாகத் தோன்றும் கிண்டல் புன்னகை அல்ல என்பது தெளிவாகவே தெரிந்தது. அவன் ஏதோ ஒன்றை மனதில் மறைத்துக்கொண்டு பூடகமாக அர்த்தத்தோடு சிரிப்பது தெரிந்ததும், எழிலும் பொற்கோவும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று சிறிது ஆர்வம் கலந்த கவனத்துடன் விஜ்ஜுவைப் பார்த்தனர்.

விஜ்ஜு: என்ன மச்சி...அதுக்குள்ள பொறுமை இல்லாம இப்படி பேசிட்ட?! பத்தாயிரம் ரூபாடா!
அவன் உண்மையில் பணத்தைப் பற்றியல்ல, வேறேதோ ஒன்றைப் பற்றிப் பேசவருகிறான் என்று தோன்றவே...மீண்டும் அமைதி நிலவியது.
விஜ்ஜு: டேய்...என்னாங்கடா..இப்டி silentaa இருந்தா என்ன அர்த்தம்?!
எழில்: இங்க பாரு...மேட்டர் என்னன்னு straightaa சொல்லு...சும்மா வள வளன்னு வெட்டித் தனமா பேசக்கூடாது. என்ன விஷயம் சொல்லு?
விஜ்ஜு மீண்டும் விஷமமாகப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே பேசத் தொடங்கினான்.
விஜ்ஜு: என்ன மச்சி (பொற்கோவைப் பார்த்து..) இப்படி ரெண்டு பேரும் பொறுமை இல்லாம, பொறுப்பில்லாமப்  பேசினா எப்படி?
பொற்கோவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.அமைதியாக இருந்தான்.
விஜ்ஜு (தொடர்ந்தான்): டேய் மச்சி...நம்ம எழிலைப் பாரு...after all ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு...எவ்ளோ research பண்ணி phd பண்ணி finalize பண்ணிருக்கான்.ரெண்டு நாளுக்கு முன்னாடி நீ கேட்டுட்டு இருந்தியே? ஞாபகம் இருக்கா?
பொற்கோ 'எதைப்பற்றி' என்று கேட்பதுபோல் நிமிர்ந்து பார்த்தான்.
விஜ்ஜு: அதான் மச்சி... நான் ஏன் மதம் மாறப்போறேன்னு  கேட்டுட்டு இருந்தியே...
பொற்கோ: ஓ.. அதுவா...ம்ம்ம்.. (விருப்பமில்லாமல் பதில் சொல்வதுபோல் சொன்னான்..) மாட்டிக்கொண்டோமோ என்ற பயத்தை மறைக்க முயல்வது தெரிந்தது...
விஜ்ஜு: மச்சி...அது வேற ஒண்ணுமில்ல மச்சி... நீயே இவ்ளோ நேரம் நாங்க பேசிட்டு இருந்தத கேட்டுட்டு இருந்தல்ல..... நாம யூஸ் பண்ணப் போற, ஒரு பத்தாயிர ரூபாய் மொபைலுக்கே இவ்ளோ யோசிக்கணும்னா,  நாம follow பண்ணப் போற religion பத்தி எவ்ளோ தெரிஞ்சு இருக்கணும்?! சொல்லு.... இந்த மொபைல் புடிக்கலேன்னா அடுத்த மாசமே வேற ஒரு மொபைல் வாங்கிக்கலாம்...எத்தனை மொபைல் வேணாலும் எத்தனை முறை வேணாலும் மாத்திக்கலாம்... but religionla models ரொம்ப குறைவு...options ரொம்ப குறைவு...sooo ...... ஒரு முறைக்கு ஒன்பது முறை, நல்லா தெளிவா படிச்சி பார்த்து விசாரிச்சு தெரிஞ்சிட்ட அப்புறம்தான் இந்த முடிவுக்கு வந்தேன் மச்சி...

நாம யூஸ் பண்ணப்போற item பத்தி ரொம்ப யோசிக்கத் தேவை இல்லை...ஆனா follow பண்ணப்போற item பத்தி தெளிவா தெரிஞ்சிட்டுதாண்டா follow பண்ணனும்...இல்லன்னா புதைகுழிதான்.... ரெண்டாம் உலகப் போர்ல german மக்கள்  கொஞ்சம் யோசிச்சு இருந்தா அவங்க ஹிட்லரை follow பண்ணிருக்க மாட்டாங்க.... ஜப்பான் மக்கள் டோஜோவ follow பண்ணி அணுகுண்டுக்கு பலி ஆகிருக்க மாட்டாங்க...இப்ப கூட பாரு...  al qaedaவ follow பண்ணிதானே twintowersஐ இடிச்சு 5000 பேருக்கு மேல செத்தாங்க அதோட terroristsசும் செத்துப்போனாங்க...அவ்ளோ ஏண்டா... நம்ம மும்பை தாஜ் terrorist அட்டாக்ல வந்த terrorists எல்லாம் ரொம்ப ரொம்ப dedicated followersதான்....ஒருத்தன்தான் உயிரோட இருக்கான் இப்ப... அவனுக்கு இப்ப வாழ்றதே நரகமாத்தான் இருக்கும்...எப்போ தூக்குல போடுவாங்க...ன்னு பயந்து போய் இருப்பான்... அவன் நல்ல வழிய follow பண்ணிருந்தான்னா இன்னிக்கு இப்படி வந்து மாட்டிட்டு இருக்க மாட்டான்.... அதும் கொலைகாரனா... அதனால... follow பண்றதுக்கு முன்னால... worthஆன்னு analyse பண்ணிதான் follow பண்ணனும் மச்சி...

அதுமட்டுமில்ல மச்சி... நட்டு(nataraj) கடைல கத்தரிக்கா கருவேப்பில வாங்கும்போது எவ்ளோ டெஸ்ட் பண்ணி வாங்குற நீ?! தட்டிப்பாக்குறதும்.... திருக்கிப் பாக்குறதும்...கிள்ளிப்பாக்குறதும்....கீரிப்பாக்குறதும்...உருட்டிப் பாக்குறதும்...ஒடச்சுப் பாக்குறதும்...எப்டில்லாம் காய் வாங்குற?! டேய்....சாப்டுற காய்கறி சரி இல்லைனா... கக்கூசு மட்டும்தாண்டா நாறும்.... ஆனா நம்ம follow பண்ற philosophy சரி இல்லைனா வாழ்க்கையே நாறிடும் மச்சி.... தெரிஞ்சுக்கோ...

ஹிந்துஇசம் எனக்கு ஏன் புடிக்கலைனா அதுல இருக்க விஷயம் அப்படி... அண்ணாவோட "கம்பரசம்" படிக்க ஆரம்பிச்சப்புறம்தான் ஹிந்துஇசத்துல இருக்க principles(கொஞ்சம் அழுத்தமாகச் சொன்னான்) பத்தி கொஞ்சம் தெரியவர ஆரம்பிச்சது...அப்படியே நீதிதேவன் மயக்கம் படிச்சப்போ.....chieeeeeee ன்னு போச்சு...அப்புறம் மாஜி கடவுள்கள்... படிச்சப்புறம் சுத்தமா மரியாதை போய்டுச்சு...நீயும் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்....தெரியக்கூடாதுன்னுதானே உனக்குப் புரியாத languageல so-called தேவபாஷைல எழுதி வச்சிருக்கானுங்க....விஷயம் தெரிஞ்சு ஒருவேள நீ மனுஷனாகிட்டா அப்புறம் அவனுங்களுக்கு ஒரு நல்ல அடிமை மிஸ் ஆகிருவான்...
பெரியார் புக்ஸ் படிச்சா தெரியும்.... ஹிந்துஇசம் மூடிவச்ச சாக்கடைன்னு....
நம்ம ஊருல சொல்லுவாங்களே... "தாழம்பூ கொண்டையாம்...உள்ள பார்த்தா ஈரும் பேனுமாம்னு"...அது perfectaa பொருந்துது.... உள்ள பாருங்கன்னு தானே சொல்றேன்....

எழில்: டேய்...டேய்...போதும்டா...பாவம் பொற்கோ...இப்பவே வாந்தி பேதி வந்துடும் போல இருக்கு...இப்பிடி புடிச்சு ராக்கிங் பண்ணிட்டு வர அவர?!
பொற்கோ (சுதாரித்துக் கொண்டு..): யோவ் விஜ்ஜு....போதும்யா....அடுத்த " நித்யானந்தா" நீதான் மச்சி....போதுமா?! enjoyyyyyy.... என்னை ஆள விடு....முடியல...

வாஷி நெருங்கி விட்டிருந்தது...அவர்கள் இறங்க ஆயத்தமாகினர்.

Saturday, January 22, 2011

ஐந்திணை ஐம்பதில் காதல்...1

                    
                            சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்று எண்ணிப்
                            பிணைமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாத்தன்
                            கள்ளத்தின் ஊச்சும்சுரம் என்பர் காதலர்
                            உள்ளம் படர்ந்த நெறி (38).

ஆசிரியர் :  மாறன் பொறையனார்
காலம் :      circa AD.4ஆம் நூற்றாண்டு
பாவகை :   வெண்பா

அடுத்த போஸ்டில் இந்தப் பாடல் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.இந்தப் பாடலின் imagery (கற்பனை) பற்றிச் சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு.ஆனால் அது ஐந்திணை ஐம்பதில் குறிப்பிடப்படும் ஒரு figurative situation என்பது அப்போது தெரியாது.சமீபத்தில் முனைவர்.பாக்கியமேரி அவர்களின் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் கண்களில் பட்டது. இந்தப் பாடல் காதலைப் பற்றிப் புரிந்துகொள்ள மிகச் சிறந்த, எளிய விளக்கம் கொண்டிருப்பதுடன், பழந்தமிழர்களின் கலாச்சாரச்-சிறப்பைப் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் அறிந்து கொள்ளவும் உதவும்.

Tuesday, January 18, 2011

மூணு பேரு மொபைல் வாங்கப் போன கதை...3

அடுத்த 12 அல்லது 13 நிமிட காத்திருப்பில், ட்ரெயின் முதல் பிளாட்பார்ம்க்கு வந்து சேர...உடனே அங்கு ஓடி ஏதோ ஒரு பெட்டியில் ஏறிக் கொண்டனர். தேடி இடம் பிடித்து உட்காரும் போதே பொற்கோவுக்கு சந்தேகம் வந்தது...
பொற்கோ(சந்தேகத்துடன்): டேய் விஜ்ஜு...தாதர்னு போட்டிருந்துதுடா பிரன்ட்ல.. வாஷி போகும்ல...
எழில் சிரிக்கத் தொடங்க...
விஜ்ஜு(லேசான அதிர்ச்சியுடன்): நெஜம்மாவா... டேய்...முன்னாடியே சொல்ல மாட்டியா நீ...எறங்குடா சீக்கிரம்....(இறங்க எத்தனித்துக்கொன்டே கூறினான்..)...அதைப்பார்த்த  பொற்கோவும்  ஓடிச்சென்று இறங்கத் தயாராக... விஜ்ஜு நின்று சிரித்துக்கொண்டே...
விஜ்ஜு(பலமாக சிரித்துக்கொண்டே..) டேய்... கேண... உனக்கு அறிவில்ல... பன்வேல் வந்து ஒன்றரை வருஷமாச்சி... ட்ரெயின் ரூட் கூட தெரியாம என்னத்த புடிங்கினு இருக்க நீ?!.. ஏன்டா.. CSTya போற நீ...வாஷிதானே?! எல்லா ட்ரெயினும் வாஷி வழிதான் போயாகனும்...மூடிட்டு ஏறி உள்ள வாடா... சந்தேகம் வருதுபாரு...இதுக்கு இவனே(எழிலை பார்த்துக்கொண்டே..)பரவாயில்லை போல இருக்கு. 
எழில் முறைக்கிறான்...
விஜ்ஜு: டேய் புலி ...(சிரிப்புடன்) என்னடா ரொமாண்டிக் லுக்கு விடுற என்ன பார்த்து...?!
பொற்கோவும் திரும்பி வந்து பொற்கோ அருகில் உட்கார்ந்து கொள்ள...வண்டி கிளம்பக் காத்திருக்கத் தொடங்கினர்...
விஜ்ஜு:ஆமா புலி.... எங்கடா treat கொடுக்க போற..?! வாஷிலேயேவா?.. இல்ல... நீல்கமலா?...
பொற்கோ(கொஞ்சமும் தாமதிக்காமல்): ஏங்க...நீல்கமலேயே கொடுங்க...
எழில்(கொஞ்சம் அதிர்ச்சியுடன்): ஏ...இப்ப எதுக்கு ட்ரீட்டு?!
விஜ்ஜு: என்னடா புலி...புது மொபைல் வாங்க போற... நாளைக்கு nightshift ... இன்னிக்கு fullaa free நீ!...ஏதாவது பண்ண வேண்டாமா?!
எழில்(முறைத்து): பண்றேண்டா...பண்றேன்... உன்ன கொலை வேணா பண்றேன்.
விஜ்ஜுவும் பொற்கோவும் சிரித்துக்கொண்டே இருக்கின்றனர். இரயில் கிளம்பத் தொடங்க,பொற்கோ ஜன்னல் வழி வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்...
அப்போதும் விஜ்ஜு விடாமல் எழிலை ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தான்...அந்த வெட்டிப் பேச்சுக்களுக்கு நடுவேதான் நம் கதைக்குத் தேவையான ஒரு சிறு உரையாடலும் வந்தது...அதை இங்கு பார்ப்போம்.
விஜ்ஜு: ஆமா என்ன மாடல்டா வாங்க போற?
எழில்: ம்ம்ம்.. சொன்னோம்ல... வாழைப்பழம்...அப்பிளும் இல்ல...பிளாக்பெர்ரியும் இல்ல... விஜ்ஜு ரொம்பவும் சிரித்துக்கொண்டே...
விஜ்ஜு: டேய்...நான் சீரியசாக் கேக்குரேண்டா...நக்கலுக்கு இல்ல...சொல்லு என்ன மொபைல்..?!
பொற்கோ இப்போது இவர்கள் பேசிக்கொள்வதை கவனத்துடன் கேட்டுக்கொண்டே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.அவனிடமிருந்து பேச்சு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை...
எழில்: 5800தான் பெட்டெர் ன்னு நெனைக்கிறேன்...கையில பத்தாயிரம் இருக்கு...அதுக்குமேல ஆனா நீதான் தரணும்...
விஜ்ஜு:டேய்...ஏண்டா எல்லாரும் நோக்கியா..நோக்கியா ன்னு பழைய காலத்துலையே இருக்கீங்க.... சோனி எரிக்ஸன்... LG... samsung... ன்னு வெரைட்டியா பார்க்க வேண்டியதுதானே?!
எழில்: போதும்டா...ஏற்கனவே இப்படி வெரைட்டி பார்த்து வாங்கித்தான் அந்த மோட்டோரோலா எனக்கு ஆப்பு வச்சிது...இதுக்கு மேல நான் experiment பண்றதா இல்ல...அப்படி உனக்கு பண்ணனும்ன்னு தோணினா உன்னோட காசுல நீயே வாங்கி பண்ணுடா யப்பா...என்ன ஆள விடு..
விஜ்ஜு விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்...
விஜ்ஜு:சரி விடு... 5800ல என்னென்ன features இருக்கு சொல்லு..
எழில்: எல்லாமே இருக்குடா.. 3megapixel கேமரா... 8gb மெமரிகார்டு..பெரிய touchscreen...வேற என்ன வேணும்!?
விஜ்ஜு: டேய்....3megapixel கேமரா இப்ப எல்லா மொபைல்லேயும் வந்திடுச்சுடா..சோனில கூட இருக்கே...
எழில்: ஆனா சோனில ஸ்க்ரீன் சைஸ் ரொம்ப சின்னதுட..
விஜ்ஜு: சரி...LG ல corby ...corby பிளஸ்...corby ப்ரோ ன்னு ஏதேதோ வந்திருக்குல... அப்புறம் அதுல கொஞ்சம் பாக்க வேண்டியதுதானே?!
எழில்: போடா... அதுல battery life ஒருநாள் கூட முழுசா தாங்காது...அதுவும் எனக்கு பாட்டு ஸ்டோர் பண்ணி கேட்கணும்னா battery life நல்ல இருக்கணும்ல...
விஜ்ஜு: சரி...அதுல 3G இருக்கா என்ன?
எழில்: இருக்கே...
விஜ்ஜு: GPRS இருக்கும் கண்டிப்பா..?
எழில்: அதுவும் இருக்கு...
விஜ்ஜு: சரி போன் மெமரி எவ்ளோ?
எழில்: சொன்னேன்லடா 8gb ...
விஜ்ஜு:டேய்ய்ய்ய்ய்ய்..... ங்கொய்யால...போன் மெமரிடா... memorycard மெமரி இல்ல... புரியுதா? என்னமோ research பண்ணினேன் அது இது ன்னு சொன்ன?
எழில்: இருடா printout பாக்குறேன்...
விஜ்ஜு:ஓஹ்ஹ...இதுல printout வேற?! கிழிஞ்சது...(printoutஐ வாங்கிப் பார்த்துக்கொண்டே..) ஓ...70mb ... குட் குட்...
எழில்(புரியாமல்..): என்னடா வாங்கலாம்தான!?
விஜ்ஜு:மெமரி okda ..
எழில்:நான் அது மட்டும்தான் செக் பண்ணல...
விஜ்ஜு:resolution எப்படின்னு பார்த்தியா...
எழில்:16million கலர்ஸ்டா...
விஜ்ஜு:பரவால்ல...சோனில எப்படி?!
எழில்:same resolution இருக்குடா...ஆனா ஸ்க்ரீன் சைஸ் ரொம்ப சின்னது... அதோட touchscreen சோனில இன்னும் சரியாய் வரலையே... எல்லாம் காஸ்ட்லி... xperia ...அப்படி இப்படின்னு...
விஜ்ஜு(printout -ஐ பார்த்துக்கொண்டே): ஓஹ்ஹ....frontside கேமரா ஒரு 1 .3 megapixelஆவது கொடுத்திருக்கலாம். ம்ம்ம் (யோசித்துக்கொண்டே...)...  சரி...battery -life எவ்ளோடா சொன்ன... இதுல சரியாய் பிரிண்ட் ஆகலை..
எழில்: 8hrs talktimeடா...
விஜ்ஜு:okkk ....
எழில்:வீடியோ ரெகார்டிங் இருக்கு...
விஜ்ஜு:அது எல்லா மொபைல்லேயும் இருக்குடா...
எழில்:30 flapsடா .... கிளியரா இருக்கும்...
விஜ்ஜு:ஏதோ சொல்ற... ஓகே..
எழில்:accelero meter இருக்கு....
விஜ்ஜு: okk ...எக்ஸ்ட்ரா battery தரங்களா?
எழில்:ம்ம்ம்ம்.. ஆமா நோக்கியா கம்பெனிய என் பேருக்கு எழுதி தராங்களாம்... ஏண்டா...
விஜ்ஜு(சிரிப்புடன்):இல்ல புலி.... இப்ப சில மாடல்ல battery தராங்கனு கேள்விப்பட்டேன்...
எழில்(முறைத்து...): ஆமா... அது சைனா மொபைல்...
விஜ்ஜு:மெமரி 8gbயா ... ம்ம்ம்..
எழில்:extendable to 16gb..
விஜ்ஜு:okkokk ...
இவ்வளவு நேரம் பொறுமையாக இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வந்து கொண்டிருந்த பொற்கோ பொறுமை இழந்தான்...
பொற்கோ: ஆமா...மொபைல் வாங்க போறீங்களா...இல்ல... மொபைல் கடை வைக்க போறீங்களா? போனோமா... பார்த்தோமா... புடிச்ச மொபைல வாங்கினோமானு இல்லாம..இது என்ன research ....PhD.... எல்லாம் பண்ணிக்கிட்டு...10000 ரூபாய்க்கு இந்த research தேவைதானா... கேட்டு கேட்டு காது வலிக்குது... விடுங்க போதும்...

Monday, January 17, 2011

மூணு பேரு மொபைல் வாங்கப் போன கதை...2

கதைக்குத் தேவை இல்லாம நெறையா பில்ட்-up கொடுத்தாச்சு......இப்போ கதையோட கரு(!)வுக்கு தொடர்பான சில விஷயங்களையும் சொல்லிடுவோம். அது என்னன்னா...நம்ம விஜ்ஜு இருக்கானே... அவன்தான் இந்த கூட்டத்திலேயே கொஞ்சமாவது அறிவுள்ள பையன்... மத்தவனுங்க ஏதோ சுமார்தான்....அதிலேயும் இந்த எழில் இருக்கானே அவன்தான் தான் perfect mp3 பிளேயர்... 1 +1 = 7 ன்னு வாத்தியாரோ, இல்ல வீட்டு பெருசுங்களோ, இல்ல ஏதோ ஒரு சாமியாரோ சொன்னா போதும்... ஆமா...ஆஅமா ன்னு மண்டைய ஆட்டுரதோட இல்லாம... வேற யாராவது மறுத்துப்பேசினா, "சத்தியமா கெடையவே கெடையாது...எங்க வாத்தியார் சொன்னதுதான் சரி... ஒண்ணும் ஒண்ணும் ஏழுதான்"-ன்னு சத்தியமே பண்ணுவான். அவனோட சத்தியத்த ஏத்துக்கலைனா மூக்குல குத்துவான்...இல்ல குத்துவாங்கிட்டு ரத்தத்தோட வருவான்...

எதுக்கெடுத்தாலும் எல்லா விஷயத்திலையும் மூக்க நொளச்சி, ரொம்ப இல்லனாலும்... கொஞ்சம் knowledge சேர்த்துக்கற ஆள் விஜ்ஜு... கொஞ்சம் பொது அறிவு....கொஞ்சம் current affairs ... கொஞ்சம் சயின்ஸ்... கொஞ்சம் கம்ப்யூட்டர் நெட்வொர்கிங்... கொஞ்சம் சாப்ட்வேர்... கொஞ்சம் philosophy ...கொஞ்சம் புக்ஸ்... கொஞ்சம் ஸ்போர்ட்ஸ்....கொஞ்சம் மியூசிக்... கொஞ்சம் சினிமா... கொஞ்சம் mechanics .... கொஞ்சம் metallurgy ... ரொம்ப காமெடி சென்ஸ்... இன்னும் ரொம்ப friendly .... இப்படி நெறைய qualities இருக்கறதால அவனை அடிக்கடி மக்கள் ஆலோசனை கேட்கறது உண்டு.
ஆனாலும் இந்த முறை, எழில் mobiles பத்தி ரொம்ப research பண்ணிட்டுதான் புது மொபைல் வாங்க போறான்...இருந்தாலும் விஜ்ஜுவோட அட்வைஸ் இருந்தா better ன்னு நெனச்சு அவனையும் அள்ளிட்டு வாஷிக்கு கெளம்பிட்டான்.  

அதோ பன்வேல் ஸ்டேஷனோட overhead வாக்கிங் bridge வந்துடுச்சு... இங்க நம்ம எழிலோட friend ஒருத்தர்...ரொம்ப காலமா பிச்சைக்காரரா இருக்கார், நம்ம எழிலை பார்த்ததும் அவருக்கு ஒரே புன்னகைதான்... 
விஜ்ஜு: டேய்... உன்னோட பிரெண்டு உன்ன பார்துட்டாண்ட... என்னமா சிரிக்கராண்டா உன்னைப் பார்த்ததும்... colgate புன்னகைய பாரு...
எழில்: வெண்ண...அடங்க மாட்ட நீ ? அந்தாளு ஏதோ பாவம்-ன்னு காசு கொடுத்தா..பிரண்டாம்ல...
பொற்கோ(மெல்ல சிரிப்புடன்): ஏங்க...என்னங்க இப்படி பேசிட்டீங்க.. விஜ்ஜு கூடத்தான் உங்களுக்கு காசு கொடுக்கறாப்ல.... அவரு உங்க பிரெண்டு இல்லையா?! 
எழில் முறைக்க...
விஜ்ஜு(நக்கலாக): ஏய் பொறு... இப்ப எழில பிச்சகாரன் ன்னு சொல்ல வர்றியா...இல்ல நான் அவனுக்கு காசு கொடுக்கறேன்னு சொல்ல வர்றியா?!
பொற்கோ(கொஞ்சமும் தாமதிக்காமல்) : ரெண்டும்தான்யா...
எழில்: யோவ்...நீ அடங்க மாட்ட... (பிச்சைக்கரனுக்கு ஒரு ரெண்டு ரூபாய் நாணயத்தை பிச்சை போட்டுவிட்டு இவர்களோடு வந்து சேர்ந்து கொள்கிறான்.) ஒன்றைச் சொல்ல மறந்து விட்டோமே... இந்த ஒரு incident வச்சே நீங்க எழில் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்... கொஞ்சம் sentimental type ... அது சிலநேரம் அதிகமாகி sentimental idiot ங்கற பேரைக்கூட வாங்கித்தறது உண்டு... 

அதுசரி.... பேசிக்கொண்டே அவர்கள் டிக்கெட் எடுக்க வரிசையில் நுழைந்து விட்டார்கள்... மூவரும் மூன்று வெவ்வேறு வரிசையில்..... யாருக்கு முதலில் டிக்கெட் எடுக்கும் வாய்ப்பு வருகிறதோ அவன் மூன்று டிக்கெட் எடுக்க வேண்டும்... எதற்காக இப்படி என்றால்.... மூன்றில் எந்த வரிசை விரைந்து முதலில் நகர்கிறதோ அந்த வரிசையில் நிற்பவன் மூவருக்கும் டிக்கெட் எடுப்பதால் நேரம் மிச்சம்...
நாமும் டிக்கெட் வாங்கிக்கொள்வோம்.... 
விஜ்ஜு(சத்தமாக ): டேய்....கேண... எழில்...எங்கடா பார்த்துனு இருக்க... லைன்-அ பாருன்னா அடுத்த லைன்-அ இருக்க பிகர பார்த்துன்னு இருக்க... பன்னாட....  
 எழில்: டேய்... மூடுறா வெண்ண...இங்க எங்கடா பிகரு இருக்கு....!?
விஜ்ஜு(சிரித்துக்கொண்டே): இல்ல..... வழக்கமா நீ வெளியே வந்த உடனே ஏதாவது ஒரு அட்டு பிகர பார்த்தாக்கூட தன்னை மறந்து போய்டுவியே.... அப்படி ஏதும் ஆகறதுக்கு முன்ன... உன்ன நான் உஷார் படுத்தரேன்....prevention is better than cure மச்சி...
எழில்(முறைப்புடன்): தெரியுது உங்க உஷாரு... நீங்க மூடிட்டு டிக்கெட் வாங்க பாருங்க... 
பொற்கோ(சத்தமாக...): யோவ்... யாருகிட்டயாவது ௧௦ ரூபா இருக்காயா...என்கிட்ட change இல்ல...(ரெண்டொரு வினாடி இடைவெளியில்....மீண்டும் சத்தமாக..) ஓகே...ஓகே... அவங்களே change தந்துட்டாங்க....
பொற்கோ வெற்றிப்புன்னகையுடன் வெளியே வர மூவரும் பிளாட்பாரம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்...விஜ்ஜு இன்னும் நக்கலாக எழிலைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தான்.பொற்கோ மீதச் சில்லறையை எண்ணிக்கொண்டே வந்து கொண்டிருந்தான். எழில் கொஞ்சம் முறைப்புடன் இருந்தாலும், அங்கங்கு தென்பட்ட சிலபல சிட்டுக்களை பார்த்துக்கொண்டே வந்தான்.பிளாட்பாரம் 3 க்கு வந்து காத்திருக்க தொடங்கினர்.