Tuesday, January 18, 2011

மூணு பேரு மொபைல் வாங்கப் போன கதை...3

அடுத்த 12 அல்லது 13 நிமிட காத்திருப்பில், ட்ரெயின் முதல் பிளாட்பார்ம்க்கு வந்து சேர...உடனே அங்கு ஓடி ஏதோ ஒரு பெட்டியில் ஏறிக் கொண்டனர். தேடி இடம் பிடித்து உட்காரும் போதே பொற்கோவுக்கு சந்தேகம் வந்தது...
பொற்கோ(சந்தேகத்துடன்): டேய் விஜ்ஜு...தாதர்னு போட்டிருந்துதுடா பிரன்ட்ல.. வாஷி போகும்ல...
எழில் சிரிக்கத் தொடங்க...
விஜ்ஜு(லேசான அதிர்ச்சியுடன்): நெஜம்மாவா... டேய்...முன்னாடியே சொல்ல மாட்டியா நீ...எறங்குடா சீக்கிரம்....(இறங்க எத்தனித்துக்கொன்டே கூறினான்..)...அதைப்பார்த்த  பொற்கோவும்  ஓடிச்சென்று இறங்கத் தயாராக... விஜ்ஜு நின்று சிரித்துக்கொண்டே...
விஜ்ஜு(பலமாக சிரித்துக்கொண்டே..) டேய்... கேண... உனக்கு அறிவில்ல... பன்வேல் வந்து ஒன்றரை வருஷமாச்சி... ட்ரெயின் ரூட் கூட தெரியாம என்னத்த புடிங்கினு இருக்க நீ?!.. ஏன்டா.. CSTya போற நீ...வாஷிதானே?! எல்லா ட்ரெயினும் வாஷி வழிதான் போயாகனும்...மூடிட்டு ஏறி உள்ள வாடா... சந்தேகம் வருதுபாரு...இதுக்கு இவனே(எழிலை பார்த்துக்கொண்டே..)பரவாயில்லை போல இருக்கு. 
எழில் முறைக்கிறான்...
விஜ்ஜு: டேய் புலி ...(சிரிப்புடன்) என்னடா ரொமாண்டிக் லுக்கு விடுற என்ன பார்த்து...?!
பொற்கோவும் திரும்பி வந்து பொற்கோ அருகில் உட்கார்ந்து கொள்ள...வண்டி கிளம்பக் காத்திருக்கத் தொடங்கினர்...
விஜ்ஜு:ஆமா புலி.... எங்கடா treat கொடுக்க போற..?! வாஷிலேயேவா?.. இல்ல... நீல்கமலா?...
பொற்கோ(கொஞ்சமும் தாமதிக்காமல்): ஏங்க...நீல்கமலேயே கொடுங்க...
எழில்(கொஞ்சம் அதிர்ச்சியுடன்): ஏ...இப்ப எதுக்கு ட்ரீட்டு?!
விஜ்ஜு: என்னடா புலி...புது மொபைல் வாங்க போற... நாளைக்கு nightshift ... இன்னிக்கு fullaa free நீ!...ஏதாவது பண்ண வேண்டாமா?!
எழில்(முறைத்து): பண்றேண்டா...பண்றேன்... உன்ன கொலை வேணா பண்றேன்.
விஜ்ஜுவும் பொற்கோவும் சிரித்துக்கொண்டே இருக்கின்றனர். இரயில் கிளம்பத் தொடங்க,பொற்கோ ஜன்னல் வழி வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்...
அப்போதும் விஜ்ஜு விடாமல் எழிலை ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தான்...அந்த வெட்டிப் பேச்சுக்களுக்கு நடுவேதான் நம் கதைக்குத் தேவையான ஒரு சிறு உரையாடலும் வந்தது...அதை இங்கு பார்ப்போம்.
விஜ்ஜு: ஆமா என்ன மாடல்டா வாங்க போற?
எழில்: ம்ம்ம்.. சொன்னோம்ல... வாழைப்பழம்...அப்பிளும் இல்ல...பிளாக்பெர்ரியும் இல்ல... விஜ்ஜு ரொம்பவும் சிரித்துக்கொண்டே...
விஜ்ஜு: டேய்...நான் சீரியசாக் கேக்குரேண்டா...நக்கலுக்கு இல்ல...சொல்லு என்ன மொபைல்..?!
பொற்கோ இப்போது இவர்கள் பேசிக்கொள்வதை கவனத்துடன் கேட்டுக்கொண்டே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.அவனிடமிருந்து பேச்சு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை...
எழில்: 5800தான் பெட்டெர் ன்னு நெனைக்கிறேன்...கையில பத்தாயிரம் இருக்கு...அதுக்குமேல ஆனா நீதான் தரணும்...
விஜ்ஜு:டேய்...ஏண்டா எல்லாரும் நோக்கியா..நோக்கியா ன்னு பழைய காலத்துலையே இருக்கீங்க.... சோனி எரிக்ஸன்... LG... samsung... ன்னு வெரைட்டியா பார்க்க வேண்டியதுதானே?!
எழில்: போதும்டா...ஏற்கனவே இப்படி வெரைட்டி பார்த்து வாங்கித்தான் அந்த மோட்டோரோலா எனக்கு ஆப்பு வச்சிது...இதுக்கு மேல நான் experiment பண்றதா இல்ல...அப்படி உனக்கு பண்ணனும்ன்னு தோணினா உன்னோட காசுல நீயே வாங்கி பண்ணுடா யப்பா...என்ன ஆள விடு..
விஜ்ஜு விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்...
விஜ்ஜு:சரி விடு... 5800ல என்னென்ன features இருக்கு சொல்லு..
எழில்: எல்லாமே இருக்குடா.. 3megapixel கேமரா... 8gb மெமரிகார்டு..பெரிய touchscreen...வேற என்ன வேணும்!?
விஜ்ஜு: டேய்....3megapixel கேமரா இப்ப எல்லா மொபைல்லேயும் வந்திடுச்சுடா..சோனில கூட இருக்கே...
எழில்: ஆனா சோனில ஸ்க்ரீன் சைஸ் ரொம்ப சின்னதுட..
விஜ்ஜு: சரி...LG ல corby ...corby பிளஸ்...corby ப்ரோ ன்னு ஏதேதோ வந்திருக்குல... அப்புறம் அதுல கொஞ்சம் பாக்க வேண்டியதுதானே?!
எழில்: போடா... அதுல battery life ஒருநாள் கூட முழுசா தாங்காது...அதுவும் எனக்கு பாட்டு ஸ்டோர் பண்ணி கேட்கணும்னா battery life நல்ல இருக்கணும்ல...
விஜ்ஜு: சரி...அதுல 3G இருக்கா என்ன?
எழில்: இருக்கே...
விஜ்ஜு: GPRS இருக்கும் கண்டிப்பா..?
எழில்: அதுவும் இருக்கு...
விஜ்ஜு: சரி போன் மெமரி எவ்ளோ?
எழில்: சொன்னேன்லடா 8gb ...
விஜ்ஜு:டேய்ய்ய்ய்ய்ய்..... ங்கொய்யால...போன் மெமரிடா... memorycard மெமரி இல்ல... புரியுதா? என்னமோ research பண்ணினேன் அது இது ன்னு சொன்ன?
எழில்: இருடா printout பாக்குறேன்...
விஜ்ஜு:ஓஹ்ஹ...இதுல printout வேற?! கிழிஞ்சது...(printoutஐ வாங்கிப் பார்த்துக்கொண்டே..) ஓ...70mb ... குட் குட்...
எழில்(புரியாமல்..): என்னடா வாங்கலாம்தான!?
விஜ்ஜு:மெமரி okda ..
எழில்:நான் அது மட்டும்தான் செக் பண்ணல...
விஜ்ஜு:resolution எப்படின்னு பார்த்தியா...
எழில்:16million கலர்ஸ்டா...
விஜ்ஜு:பரவால்ல...சோனில எப்படி?!
எழில்:same resolution இருக்குடா...ஆனா ஸ்க்ரீன் சைஸ் ரொம்ப சின்னது... அதோட touchscreen சோனில இன்னும் சரியாய் வரலையே... எல்லாம் காஸ்ட்லி... xperia ...அப்படி இப்படின்னு...
விஜ்ஜு(printout -ஐ பார்த்துக்கொண்டே): ஓஹ்ஹ....frontside கேமரா ஒரு 1 .3 megapixelஆவது கொடுத்திருக்கலாம். ம்ம்ம் (யோசித்துக்கொண்டே...)...  சரி...battery -life எவ்ளோடா சொன்ன... இதுல சரியாய் பிரிண்ட் ஆகலை..
எழில்: 8hrs talktimeடா...
விஜ்ஜு:okkk ....
எழில்:வீடியோ ரெகார்டிங் இருக்கு...
விஜ்ஜு:அது எல்லா மொபைல்லேயும் இருக்குடா...
எழில்:30 flapsடா .... கிளியரா இருக்கும்...
விஜ்ஜு:ஏதோ சொல்ற... ஓகே..
எழில்:accelero meter இருக்கு....
விஜ்ஜு: okk ...எக்ஸ்ட்ரா battery தரங்களா?
எழில்:ம்ம்ம்ம்.. ஆமா நோக்கியா கம்பெனிய என் பேருக்கு எழுதி தராங்களாம்... ஏண்டா...
விஜ்ஜு(சிரிப்புடன்):இல்ல புலி.... இப்ப சில மாடல்ல battery தராங்கனு கேள்விப்பட்டேன்...
எழில்(முறைத்து...): ஆமா... அது சைனா மொபைல்...
விஜ்ஜு:மெமரி 8gbயா ... ம்ம்ம்..
எழில்:extendable to 16gb..
விஜ்ஜு:okkokk ...
இவ்வளவு நேரம் பொறுமையாக இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வந்து கொண்டிருந்த பொற்கோ பொறுமை இழந்தான்...
பொற்கோ: ஆமா...மொபைல் வாங்க போறீங்களா...இல்ல... மொபைல் கடை வைக்க போறீங்களா? போனோமா... பார்த்தோமா... புடிச்ச மொபைல வாங்கினோமானு இல்லாம..இது என்ன research ....PhD.... எல்லாம் பண்ணிக்கிட்டு...10000 ரூபாய்க்கு இந்த research தேவைதானா... கேட்டு கேட்டு காது வலிக்குது... விடுங்க போதும்...

No comments: