Wednesday, February 9, 2011

குறுந்தொகையில்...1

                  "யாயும் ஞாயும் யாரா கியரோ!                                     
                   எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்?            
                   யானும் நீயும் எவ்வழி அறிதும்?                                  
                   செம்புலப் பெயல் நீர்போல
                   அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே."                     
                                                   - பாடல் எண் : 40 , குறுந்தொகை. 

                நேற்று "தூது" குறித்து எழுதிய பின், தூது இலக்கியம் குறித்து என்னுடைய புத்தகத் தொகுப்பில் கொஞ்சம் தேடிக்கொண்டிருந்தேன். சாமி.சிதம்பரனார் எழுதிய "எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்" மற்றும் "பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்" என்ற புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். தூது குறித்துப் பெரிதாகக் குறிப்பிடத்தக்க செய்திகள் ஏதும் அவைகளில் கிடைக்கவில்லை. ஆனால்.... "எட்டுத் தொகை" நூல்களில் ஒன்றான  "குறுந்தொகை" குறித்த செய்தி எனது கவனத்தைக் கவர்ந்தது. அதற்கு முக்கியக் காரணம் ஒரு பாடல் "இருவர்" திரைப்படத்தில் இடம் பெற்றதால் இருக்கலாம். பல்லாயிரம் பழம்பாடல்களுக்கு நடுவே, இந்தப்பாடல் மட்டும் இத்தகைய ஆர்வத்தைக் கிளப்பியிருக்க வேறு காரணம் இருக்க வாய்ப்புக் குறைவே.


               இந்தப் பாடல் குறித்து எனது கருத்தையும், இதில் காதல் குறித்துக் கூறப்பட்டுள்ள செய்தியையும், இதே போன்ற காதற்கருத்து ஆங்கில இலக்கியத்தில் காணக் கிடைப்பது பற்றியும் அடுத்த பதிவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.



No comments: