கதைக்குத் தேவை இல்லாம நெறையா பில்ட்-up கொடுத்தாச்சு......இப்போ கதையோட கரு(!)வுக்கு தொடர்பான சில விஷயங்களையும் சொல்லிடுவோம். அது என்னன்னா...நம்ம விஜ்ஜு இருக்கானே... அவன்தான் இந்த கூட்டத்திலேயே கொஞ்சமாவது அறிவுள்ள பையன்... மத்தவனுங்க ஏதோ சுமார்தான்....அதிலேயும் இந்த எழில் இருக்கானே அவன்தான் தான் perfect mp3 பிளேயர்... 1 +1 = 7 ன்னு வாத்தியாரோ, இல்ல வீட்டு பெருசுங்களோ, இல்ல ஏதோ ஒரு சாமியாரோ சொன்னா போதும்... ஆமா...ஆஅமா ன்னு மண்டைய ஆட்டுரதோட இல்லாம... வேற யாராவது மறுத்துப்பேசினா, "சத்தியமா கெடையவே கெடையாது...எங்க வாத்தியார் சொன்னதுதான் சரி... ஒண்ணும் ஒண்ணும் ஏழுதான்"-ன்னு சத்தியமே பண்ணுவான். அவனோட சத்தியத்த ஏத்துக்கலைனா மூக்குல குத்துவான்...இல்ல குத்துவாங்கிட்டு ரத்தத்தோட வருவான்...
எதுக்கெடுத்தாலும் எல்லா விஷயத்திலையும் மூக்க நொளச்சி, ரொம்ப இல்லனாலும்... கொஞ்சம் knowledge சேர்த்துக்கற ஆள் விஜ்ஜு... கொஞ்சம் பொது அறிவு....கொஞ்சம் current affairs ... கொஞ்சம் சயின்ஸ்... கொஞ்சம் கம்ப்யூட்டர் நெட்வொர்கிங்... கொஞ்சம் சாப்ட்வேர்... கொஞ்சம் philosophy ...கொஞ்சம் புக்ஸ்... கொஞ்சம் ஸ்போர்ட்ஸ்....கொஞ்சம் மியூசிக்... கொஞ்சம் சினிமா... கொஞ்சம் mechanics .... கொஞ்சம் metallurgy ... ரொம்ப காமெடி சென்ஸ்... இன்னும் ரொம்ப friendly .... இப்படி நெறைய qualities இருக்கறதால அவனை அடிக்கடி மக்கள் ஆலோசனை கேட்கறது உண்டு.
ஆனாலும் இந்த முறை, எழில் mobiles பத்தி ரொம்ப research பண்ணிட்டுதான் புது மொபைல் வாங்க போறான்...இருந்தாலும் விஜ்ஜுவோட அட்வைஸ் இருந்தா better ன்னு நெனச்சு அவனையும் அள்ளிட்டு வாஷிக்கு கெளம்பிட்டான்.
அதோ பன்வேல் ஸ்டேஷனோட overhead வாக்கிங் bridge வந்துடுச்சு... இங்க நம்ம எழிலோட friend ஒருத்தர்...ரொம்ப காலமா பிச்சைக்காரரா இருக்கார், நம்ம எழிலை பார்த்ததும் அவருக்கு ஒரே புன்னகைதான்...
விஜ்ஜு: டேய்... உன்னோட பிரெண்டு உன்ன பார்துட்டாண்ட... என்னமா சிரிக்கராண்டா உன்னைப் பார்த்ததும்... colgate புன்னகைய பாரு...
எழில்: வெண்ண...அடங்க மாட்ட நீ ? அந்தாளு ஏதோ பாவம்-ன்னு காசு கொடுத்தா..பிரண்டாம்ல...
பொற்கோ(மெல்ல சிரிப்புடன்): ஏங்க...என்னங்க இப்படி பேசிட்டீங்க.. விஜ்ஜு கூடத்தான் உங்களுக்கு காசு கொடுக்கறாப்ல.... அவரு உங்க பிரெண்டு இல்லையா?!
எழில் முறைக்க...
விஜ்ஜு(நக்கலாக): ஏய் பொறு... இப்ப எழில பிச்சகாரன் ன்னு சொல்ல வர்றியா...இல்ல நான் அவனுக்கு காசு கொடுக்கறேன்னு சொல்ல வர்றியா?!
பொற்கோ(கொஞ்சமும் தாமதிக்காமல்) : ரெண்டும்தான்யா...
எழில்: யோவ்...நீ அடங்க மாட்ட... (பிச்சைக்கரனுக்கு ஒரு ரெண்டு ரூபாய் நாணயத்தை பிச்சை போட்டுவிட்டு இவர்களோடு வந்து சேர்ந்து கொள்கிறான்.) ஒன்றைச் சொல்ல மறந்து விட்டோமே... இந்த ஒரு incident வச்சே நீங்க எழில் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்... கொஞ்சம் sentimental type ... அது சிலநேரம் அதிகமாகி sentimental idiot ங்கற பேரைக்கூட வாங்கித்தறது உண்டு...
அதுசரி.... பேசிக்கொண்டே அவர்கள் டிக்கெட் எடுக்க வரிசையில் நுழைந்து விட்டார்கள்... மூவரும் மூன்று வெவ்வேறு வரிசையில்..... யாருக்கு முதலில் டிக்கெட் எடுக்கும் வாய்ப்பு வருகிறதோ அவன் மூன்று டிக்கெட் எடுக்க வேண்டும்... எதற்காக இப்படி என்றால்.... மூன்றில் எந்த வரிசை விரைந்து முதலில் நகர்கிறதோ அந்த வரிசையில் நிற்பவன் மூவருக்கும் டிக்கெட் எடுப்பதால் நேரம் மிச்சம்...
நாமும் டிக்கெட் வாங்கிக்கொள்வோம்....
விஜ்ஜு(சத்தமாக ): டேய்....கேண... எழில்...எங்கடா பார்த்துனு இருக்க... லைன்-அ பாருன்னா அடுத்த லைன்-அ இருக்க பிகர பார்த்துன்னு இருக்க... பன்னாட....
எழில்: டேய்... மூடுறா வெண்ண...இங்க எங்கடா பிகரு இருக்கு....!?
விஜ்ஜு(சிரித்துக்கொண்டே): இல்ல..... வழக்கமா நீ வெளியே வந்த உடனே ஏதாவது ஒரு அட்டு பிகர பார்த்தாக்கூட தன்னை மறந்து போய்டுவியே.... அப்படி ஏதும் ஆகறதுக்கு முன்ன... உன்ன நான் உஷார் படுத்தரேன்....prevention is better than cure மச்சி...
எழில்(முறைப்புடன்): தெரியுது உங்க உஷாரு... நீங்க மூடிட்டு டிக்கெட் வாங்க பாருங்க...
பொற்கோ(சத்தமாக...): யோவ்... யாருகிட்டயாவது ௧௦ ரூபா இருக்காயா...என்கிட்ட change இல்ல...(ரெண்டொரு வினாடி இடைவெளியில்....மீண்டும் சத்தமாக..) ஓகே...ஓகே... அவங்களே change தந்துட்டாங்க....
பொற்கோ வெற்றிப்புன்னகையுடன் வெளியே வர மூவரும் பிளாட்பாரம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்...விஜ்ஜு இன்னும் நக்கலாக எழிலைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தான்.பொற்கோ மீதச் சில்லறையை எண்ணிக்கொண்டே வந்து கொண்டிருந்தான். எழில் கொஞ்சம் முறைப்புடன் இருந்தாலும், அங்கங்கு தென்பட்ட சிலபல சிட்டுக்களை பார்த்துக்கொண்டே வந்தான்.பிளாட்பாரம் 3 க்கு வந்து காத்திருக்க தொடங்கினர்.